Realme C2 (3GB + 32GB model), Realme 5 Pro, Realme XT, Realme X மற்றும் Realme 5 ஸ்மார்ட்போன்களை அமேசான் வழியாக நாளை முதல் விற்பனை செய்யத் தொடங்குவதாக ஷெத் ட்வீட்டில் அறிவித்தார்.
Realme X2 Pro மற்றும் Realme X2 ஆகியவை அவற்றின் ஜனவரி OTA அப்டேட்டுகளை பெறுகின்றன. மேலும், இரண்டு போன்களுமே டிசம்பர் 2019 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பு உள்ளிட்ட இணையான அம்சங்களைப் பெறுகின்றன.
இந்தியாவில் Realme X2 Pro Master Edition-ன் விலை ரூ. 34,999-யாக விலையிடப்பட்டுள்ளது. 12GB RAM மற்றும் 256GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் Realme X2-வின் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 16,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன், டிசம்பர் 20 முதல் விற்பனைக்கு வரும்.
இந்தியாவில் Realme X2 Pro-வின் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ. 29,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், 12GB RAM + 256GB ஸ்டோரேஜின் விலை ரூ. 33,999-யாக உள்ளது.