Realme X2 Pro மற்றும் Realme 5s - ஹைலைட்ஸ்....!

Realme X2 Pro மற்றும் Realme 5s - ஹைலைட்ஸ்....!

இந்தியாவில் Realme X2 Pro-வின் விலை ரூ. 29,999-யாகவும், Realme 5s-ன் விலை ரூ. 9,999-யாகவும் உள்ளது

ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் Realme X2 Pro-வின் விலை ரூ. 29,999
  • இந்தியாவில் Realme 5s-ன் விலை ரூ. 9,999
  • Realme XT 730G டிசம்பரில் அறிமுகமாகவுள்ளது
விளம்பரம்

இந்தியாவில் Realme X2 Pro-வின் விலை ரூ. 29,999-யாகவும் மற்றும் Realme 5s-ன் விலை ரூ. 9,999-யகவும் உள்ளது. Realme X2 Pro சிறந்த அம்சம் 50W சார்ஜர் மற்றும் நிறுவனம் சார்ஜிங் ஒப்பீட்டு சோதனையுடன் நிகழ்வைத் தொடங்கியது. நான்கு போன்களுடன் iPhone 11 Pro Max மற்றும் Realme X2 Pro ஆகியவற்றை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யப்பட்டன. ஏறக்குறைய 19 நிமிடங்களுக்குப் பிறகு, Huawei P30 Pro 51 சதவீதத்திலும், Samsung Galaxy Note 10+ 46 சதவீதத்திலும், iPhone 11 Pro Max 34 சதவீதத்திலும் மற்றும் Realme X2 Pro 78 சதவீதத்திலும் இருந்தது. வயர்லெஸ் ஹெட்ஃபோன்களை உள்ளடக்கிய பிற தயாரிப்புகளுடன் டிசம்பர் மாதத்தில் Realme XT 730G அறிமுகம் செய்யப்படுவதையும் Realme உறுதிப்படுத்தியது.

Realme X2 Pro மற்றும் Realme 5s வெளியீட்டு நிகழ்வு முடிந்தது. Realme X2 Pro-வின் முதல் பார்வைக்கு அனைத்து அப்டேட்களுக்கும் கீழே உருட்டவும் (Scroll down) அல்லது கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.


Realme X2 Pro-வின் விவரக்குறிப்புகள்:

Realme X2 Pro-வின் சிறப்பம்சமாக அதன் 50W SuperVOOC சார்ஜர் உள்ளது. இது அதன் 4,000mAh பேட்டரியை 35 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என்று ரியல்மி கூறுகிறது. ஸ்மார்ட்போன் முன் மற்றும் பின்புறத்தில் Corning Gorilla Glass 5-ஐப் பயன்படுத்துகிறது. hardware-based blue light filter உடன் 90Hz refresh விகிதத்தோடு 6.5-inch Full-HD+ panel டிஸ்பிளே உள்ளது. இரவில் இந்த தொலைபேசியைப் பயன்படுத்தினால் நன்றாக தூங்க உதவும்.

Realme X2 Pro  Qualcomm Snapdragon 855+ SoC உடன் அனுப்பப்படுகிறது. மேலும், UFS 3.0 ஸ்டோரேஜைப் பயன்படுத்துகிறது. Realme X2 Pro-வில் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இந்த போனில், stereo speaker-களுடன் Dolby Atmos ஆதரவு உள்ளது.

Android 9 Pie அடிப்படையிலான ColorOS 6.1 உடன் Realme X2 Pro-வுடன் அனுப்பப்படுகிறது.

Realme X2 Pro-வில் Samsung GW1 sensor உடன் 64-megapixel முதன்மை கேமரா, 2x optical zoom மற்றும் 20x hybrid zoom உடன் 13-megapixel telephoto கேமரா, integrated macro shooting sensor உடன் 8-megapixel wide-angle கேமரா மற்றும் 2-megapixel depth சென்சார் ஆகியவை quad கேமரா அமைப்பில் இடம்பெறும். செல்ஃபிகளுக்கு, போனில் 16-megapixel shooter உள்ளது.

Realme X2 Pro, Concrete மற்றும் Red Brick ஆகிய இரண்டு முதன்மை பதிப்புகளிலும் கிடைக்கும். இவை Realme X2 Pro-வின் வரையறுக்கப்பட்ட பதிப்பு வகைகள் ஆகும்.


Realme 5s-ன் விவரக்குறிப்புகள்:

Realme 5s-ல் 48-megapixel முதன்மை கேமரா, 5,000mAh பேட்டரி, Snapdragon 665 processor மற்றும் waterdrop notch உடன் 6.51-inch HD+ டிஸ்பிளே ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. சாதனத்தின் பின்புறத்தில் fingerprint சென்சார் மற்றும் diamond-cut pattern ஆகியவற்றைக் கொண்டிருக்கும். Realme 5s, Crystal Red, Crystal Blue மற்றும் Crystal Purple நிறங்களில் கிடைக்கிறது.

Realme 5s-ல் quad கேமரா அமைப்பு உள்ளது. Samsung GM1 சென்சாருடன் 48-megapixel முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. Realme 5s-ல் ultra-wide angle கேமரா,  macro கேமரா மற்றும் depth சென்சார் உள்ளது.


இந்தியாவில் Realme X2 Pro-வின் விலை:

இந்தியாவில் Realme X2 Pro-வின் 8GB RAM, 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 29,999-யாகவும், 2GB RAM, 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 33,999-யாக உள்ளது. Realme X2 Pro முதல் விற்பனை, அழைப்பிதழ் மட்டுமே என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. Realme X2 Pro Master Edition-ன் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜின் விலை ரூ. 34,999-யாக அறிமுகப்படுத்தப்படும். Realme X2 Pro Master Edition கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிடைக்கும்.


இந்தியாவில் Realme 5s-ன் விலை:

இந்தியாவில் Realme 5s-ன் 4GB RAM, 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 9,999 ஆகும். அதே போல் 4GB RAM, 128GB ஸ்டோரேஜின் வேரியண்டின் விலை ரூ. 10,999 ஆகும். Realme 5s-ன் முதல் விற்பனை நவம்பர் 29 ஆம் தேதி Flipkart மற்றும் Realme.com-ல் நடைபெறும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »