சியோமி இந்திய சந்தையில் 2014ஆம் ஆண்டு Mi 3 ஸ்மார்ட்போனின் மூலம் நுழைகிறது. இதன் அடுத்த ஸ்மார்ட்போனே ஸ்னேப்ட்ராகன் 800 ப்ராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன், அதுவும் குறைந்த விலையில். அன்றிலிருந்து இன்று வரை, குறைந்த விலையில் சிறந்த அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்திய வண்ணமே இருந்தது. அந்த வரிசையில், ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போனையும் இணைத்துள்ளது சியோமி நிறுவனம். 27,999 ரூபாயில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், அனைத்துவிதமான அம்சங்களிலும் டாப். ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர், 48 மெகாபிக்சல் கேமரா போன்ற அம்சங்கள் இதை உறுதி செய்யும். ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போனின் அம்சங்கள், பல இடங்களில் ஒன்ப்ளஸின் டாப்-எண்ட் பிரீமியம் ஸ்மார்ட்போனான ஒன்ப்ளஸ் 7 Pro போன்றே அமைந்துள்ளது.
ரெட்மீ K20 Pro: வடிவமைப்பு!
சமீப காலங்களில் ஸ்மார்ட்போன்களில் பல புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகியுள்ளது. உதாரணத்திற்கு, ஆசுஸ் 6Z ஸ்மார்ட்போனின் ரொட்டேட்டிங் கேமரா, ஒன்ப்ளஸ் 7 Pro-வின் பாப்-அப் கேமரா. இந்த வரிசையில் சியோமியும் தன்னை இணைத்துக்கொண்டது. இதன் விளைவு ரெட்மீ K20 Pro-வில் பாப்-அப் செல்பி கேமரா.
இந்த ஸ்மார்ட்போன் 6.39 இன்ச் திரையை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 19.5:9 திரை விகிதத்தை கொண்டுள்ளது. ரெட்மீ K20 Pro 91.9 சதவிகித திரை-உடல் விகிதத்தை கொண்டுள்ளது. FHD+ திரை கொண்ட இந்த ரெட்மீ K20 Pro 1080x2340 பிக்சல்கள் அளவிலான திரையை கொண்டுள்ளது.
முன் மற்றும் பின் என இரு புறங்களிலும் கொரில்லா கிளாஸ் 5 பொருத்தப்பட்டு ஒரு பிரீமியம் தோற்றத்தை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்கள் நீலம் (Glacier Blue), சிவப்பு (Flame Red), மற்றும் கருப்பு (Carbon Black) என மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ளது.
பாப்-அப் செல்பி கேமரா கொண்ட இந்த ஸ்மார்ட்போன், LED லைட்டையும் கொண்டுள்ளது. பாப்-அப் கேமராவை ஆன் செய்யும்போது இந்த LED லைட் எறிந்து அறிகுறி காட்டும். இதில் என்ன சிறப்பு என்றால் நீலம் நிற ஸ்மார்ட்போனின் நீல நிறத்திலும், சிவப்பு நிற ஸ்மார்ட்போனில் சிவப்பு நிறத்திலும் இந்த LED லைட் எறியும். கருப்பு நிற ஸ்மார்ட்போனிலும் இந்த LED லைட் சிவப்பு நிறத்திலேயே ஒளிரும். மற்ற நோட்டிபிகேசன்களின்போதும் இந்த LED லைட் ஒளிரும்.
இந்த ஸ்மார்ட்போனில், பாப்-அப் கேமரா, LED நோட்டிபிகேசன் லைட் மட்டுமின்றி 3.5mm ஆடியோ ஜேக்கும் இடம் பெற்றுள்ளது. இதன் கீழ் பகுதியில், மற்ற ஸ்மார்ட்போன்களைப்போல் டை-C சார்ஜர் போர்ட், ஸ்பீக்கர், ஆகியவை மட்டுமின்றி சிம் ட்ரேயையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இடதுபுறத்தில் எதுவும் இடம்பெறாமல் காலியாக உள்ளது.
மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், கேமராக்கள் ஒன்றின் கீழ் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
ரெட்மீ K20 Pro: மென்பொருள்!
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டுள்ளது. டாப்-எண்ட் மாடல்களான ஒன்ப்ளஸ் 7 Pro, நுபியா ரெட் மேஜிக் 3, ப்ளாக் ஷார்க் 2, ஒப்போ ரெனோ 10X ஜூம் ஆகிய ஸ்மார்ட்போன்களில் இந்த ப்ராசஸர்தான் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மீ K20 Pro இரண்டு வகைகளில் கிடைக்கப்பெறும். 6GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என்ற அளவுகளை கொண்ட அந்த இரண்டு ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்கள், 27,999 ரூபாய் மற்றும் 30,999 ரூபாய் என்ற விலைகளை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் UFS 2.1 சேமிப்பை கொண்டுள்ளது. ஆனால் UFS 3.0 சேமிப்பை கொண்ட ஒன்ப்ளஸ் 7 Pro-வை விட இது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புகளில் இந்த ஸ்மார்ட்போன் வை-பை 802.11ac, ப்ளூடூத் v5.0, 4G VoLTE ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது.
மற்ற ரெட்மீ ஸ்மார்ட்போன்களை பொன்றே, ரெட்மீ K20 Pro-வும் ஆண்ட்ராய்ட் 9 பை (Android 9 Pie) MIUI 10 அமைப்பை கொண்டுள்ளது. இந்த ரெட்மீ K20 Pro கேம் பூஸ்ட் 2.0 அம்சத்தையும் கொண்டுள்ளது.
க்செயல்பாடு மற்றும் பேட்டரி
8GB அளவிலான RAM கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் லேக் ஆக வாய்ப்பில்லை. அதே நேரம் ஆப்களின் செயல்பாடுகளும் வேகமாகவே இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் மற்றும் ஃபேஸ் ரெகக்னைசேஷன் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் அன்லாக் செய்ய வேகமாக இருந்தாலும், ஒன்ப்ளஸ் 7 ஸ்மார்ட்போனைப்போல் வேகமாக உள்ளது. பாப்-அப் கேமரா ஆன் ஆகி ஃபேஸ் ரெகக்னைசேஷன் செய்ய வேண்டியுள்ளதால் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்டே அன்லாக் செய்ய வேகமான ஒரு முறையாக உள்ளது.
அன்டுடு (AnTuTu)-வால் வழங்கப்படும் மதிப்பெண்களில் ஆசுஸ் 6Z 355,965 மதிப்பெண்களையும், ஒன்ப்ளஸ் 7 375,219 மதிப்பெண்களையும் பெற்றிருந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போன் 368,332 மதிப்பெண்களை பெற்றுள்ளது. கீக்பென்ச் சிங்கில்-கோர் மற்றும் மல்டி-கோர் தேர்வுகளில், இந்த ஸ்மார்ட்போன் 3,421 மற்றும் 10,775 மதிப்பெண்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டரி பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் 4000mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் 27W அதிவேக சார்ஜிங் வசதியையும் பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
இந்த ஸ்மார்ட்போனில், கிராபிக்ஸ் HD-யில் வைத்து, ஃப்ரேம் ரேட்டை உச்சத்தில் வைத்து பப்ஜி விளையாடி பேட்டரியை சோதிக்கையில், 30 நிமிடங்களில் 13 சதவிகிதம் சார்ஜ் குறைந்தது. HD வீடியோ லூப் சோதனையில், இந்த ஸ்மார்ட்போன் 19 மணி மற்றும் 26 நிமிடங்கள் வரை நீடித்தது. அதே நேரம், நம் அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதுபோல் பயன்படுத்தினால், நாளின் முடிவில் 50 சதவிகிதம் சார்ஜ் மீதமுள்ளது.
18W சார்ஜரின் மூலம், இந்த ஸ்மார்ட்போனை 30 நிமிட நேரத்தில் 45 சதவிகிதமும் 1 மணி நேரத்தில் 80 சதவிகிதமும் சார்ஜ் செய்துகொள்ளலாம்.
ரெட்மீ K20 Pro: கேமரா
மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அவற்றில் 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா f/1.75 அபர்சரை கொண்டுள்ளது. 13 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் கேமரா f/2.4 அபர்சரை கொண்டுள்ளது. இந்த கேமரா 124.8 டிகிரி வரை விரிந்த புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது. மூன்றாவதாக f/2.4 அபர்சருடன் 8 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.
முன்புறத்தில் 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் செல்பி கேமராவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
முடிவு:
சியோமியின் பிரீமியம் ஸ்மார்ட்போனான, ரெட்மீ K20 Pro மலிவு விலையிலேயே அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜர் இல்லையென்றாலும், குறைந்த விலை காரணத்தால், இந்த வசதியை எதிர்பார்க்கப்பட முடியாது. சக்திவாய்ந்த ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதுமட்டுமின்றி பாப்-அப் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்ட ஒரு ஸ்மார்ட்போனில், 4000mAh பேட்டரி கொண்டுள்ளது என்பது சிறிய ஏமாற்றமே. ஆனால், ஒன்றரை நாளுக்கு மேலாக நீடிக்கும் பேட்டரி பேக்அப்பை ஏற்றுக்கொள்ளலாம்.
ஒன்ப்ளஸ் 7 போல் UFS 3.0 சேமிப்பு வசதி இல்லையென்றாலும், இந்த ஸ்மார்ட்போனின் மலிவு விலைதான் கவணிக்கப்பட வேண்டியது. 27,999 ரூபாய் விலை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை, ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்ட மற்ற ஸ்மார்ட்போன்களின் விலையுடன் ஒப்பிடுகையில், மிகவும் மலிவு என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்