ரியல்மி, கடந்த மாதம் இந்தியாவில் Realme X2 Pro-வை அறிமுகப்படுத்தியது. ஒப்போ ஸ்பின்-ஆஃப் முதலில், போனின் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்டுகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இவை இரண்டும் 8 ஜிபி ரேமை பேக் செய்யும். ஆனால் இப்போது, நிறுவனம் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜுடன் கூடிய Realme X2 Pro-வின் புதிய வேரியண்டை வெளியிட திட்டமிட்டுள்ளது.
Realme மொபைல்களின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் (Madhav Sheth) சமீபத்தில் ட்வீட் செய்துள்ளார். நிறுவனம் விரைவில் 6 ஜிபி + 64 ஜிபி போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இது நாட்டில் வருங்கால Realme X2 Pro வாங்குபவர்களுக்கு மிகவும் மலிவு விலையை வழங்குகிறது. இந்தியாவில், Realme X2 Pro-வின் 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ. 27,999 ஆகும். ஆனால், அவை சந்தையில் கிடைப்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.
ஒப்பிடுகையில், Realme X2 Proவின் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ. 29,999-யாகவும், அதன் டாப்-எண்ட் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 33.999-யாகவும் விலையிடப்பட்டுள்ளது. வண்ண விருப்பங்களைப் பொறுத்தவரை, ரியல்மியின் முதல் முதன்மை போன் Lunar White மற்றும் Neptune Blue-வில் வருகிறது. Concrete மற்றும் Red Brick ஆகிய இரண்டு வண்ணங்களில் வரும் Realme X2 Pro Master Edition-ஐயும் நிறுவனம் வழங்குகிறது.
Realme X2 Pro, 20:9 aspect ratio, 90Hz refresh rate உடன் 6.5-inch full-HD+ (1080x2400 pixels) Super AMOLED Fluid டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போன் 12GB RAM உடன் இணைக்கப்பட்டு Qualcomm Snapdragon 855+ octa-core SoC-யால் இயக்கப்படுகிறது. Realme X2 Pro-வில் 50W SuperVOOC Flash சார்ஜ் ஆதரவுடன் 4,000mAh பேட்டரியை ரியல்மி வழங்குகிறது.
Realme X2 Pro-வில் f/1.8 lens உடன் 64-megapixel Samsung ISOCELL Bright GW1 முதன்மை சென்சார் ஆகியவை quad rear கேமரா அமைப்பில் உள்ளது. f/2.5 telephoto lens உடன் 13-megapixel இரண்டாம் நிலை சென்சார், f/2.2 aperture உடன் 115-degree ultra-wide-angle லென்ஸோடு 8-megapixel மூன்றாம் நிலை சென்சார் மற்றும் 2-megapixel depth சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகளுக்காக, முன்புறத்தில் f/2.0 lens உடன் 16-megapixel Sony IMX471 கேமரா சென்சார் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்