Realme 5s கடந்த வாரம் Realme X2 Pro-வுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
Crystal Blue, Crystal Purple மற்றும் Crystal Red வண்ணங்களில் Realme 5s வருகிறது
குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வரும் Realme 5s, இன்று இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வரும். Realme 5-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான இந்த போன் அதிகாரப்பூர்வ Realme India online store மற்றும் Flipkart வழியாக கிடைக்கும்.
இந்தியாவில் Realme 5s-ன் விலை, விற்பனை சலுகைகள்:
Realme 5s (Review) 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 9,999-யாகவும், அதன் 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 10,999-யாகவும் விலையிடப்பட்டுள்ளது. இந்த போன் Crystal Blue, Crystal Purple மற்றும் Crystal Red வண்ண விருப்பங்களில் கிடைக்கும். Realme 5s-ன் முதல் விற்பனை Flipkart மற்றும் அதிகாரப்பூர்வ Realme website வழியாக மதியம் 12 மணிக்கு தொடங்கும்.
விற்பனை சலுகைகளைப் பொறுத்தவரை, நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் Realme 5s வாங்குவோர் no-cost EMI மற்றும் ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து ரூ. 7,000 பலன்களையும் பெறலாம். பிளிப்கார்ட்டிலிருந்து போனை வாங்கும் நுகர்வோருக்கு, HDFC வங்கி டெபிட் கார்டுதாரர்களுக்கு 10 சதவீதம் கேஷ்பேக், பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டில் 5 சதவீதம் கேஷ்பேக், ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டில் 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடி மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுடன் EMI பர்ச்சேஸில் அதற்கு சமமான தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு வங்கி சலுகைகள் கிடைக்கும்.
Realme 5s-ன் விவரக்குறிப்புகள்:
டூயல் சிம் (நானோ) Realme 5s, ColorOS 6 உடன் Android Pie-யால் இயங்குகிறது. இந்த போன் 89 percent screen-to-body ratio உடன் மற்றும் Corning Gorilla Glass 3+ protection ஆகியவற்றுடன் 6.5-inch HD+ (720 x 1600 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது.
Realme 5s-ல் 128GB ஸ்டோரேஜ் உள்ளது. மேலும், அவை microSD card வழியாக (256GB வரை) விரிவாக்ககூடியது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS/A-GPS, Beidou, Galileo மற்றும் Glonass ஆகியவை அடங்கும். இது 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவரும்.
Realme 5s, f/1.8 aperture உடன் 48-megapixel primary snapper-ஐ குவாட் ரியர் கேமரா அமைப்பில் உள்ளடக்கியுள்ளது. 119-degree (±1.5-degree) field of view மற்றும் f/2.25 aperture உடன் 8-megapixel wide-angle shooter, f/2.4 aperture உடன் 2-megapixel macro lens மற்றும் f/2.4 aperture உடன் 2-megapixel portrait கேமரா ஆகியவை உதவுகிறது. முன்பக்கத்தில், 13-megapixel selfie snapper உள்ளது. இது HDR, AI Beautification மற்றும் Time Lapse அம்சங்களை ஆதரிக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features