இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வரும் Realme X2 Pro Master Edition! 

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வரும் Realme X2 Pro Master Edition! 

Realme X2 Pro Master Edition இந்தியாவில் Realme X2 Pro-வுடன் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது

ஹைலைட்ஸ்
 • Realme X2 Pro Master Edition இன்று இரவு 8.55 மணிக்கு விற்பனைக்கு வரும்
 • இந்த போன் Flipkart மற்றும் Realme.com வழியாக கிடைக்கும்
 • எக்ஸ்சேஞ் தள்ளுபடி, no-cost EMI ஆப்ஷன் ஆகியவை விற்பனை சலுகைகளில் அடங்கும்

Realme X2 Pro Master Edition இன்று இந்தியாவில் அதன் முதல் விற்பனைக்கு வர உள்ளது. Realme X2 Pro-வுடன் இணைந்து இந்த ஆண்டு நவம்பரில் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதன் முதல் விற்பனை இன்று Flipkart மற்றும் Realme.com-ல் நடைபெறும். இந்த போன் இன்று இரவு 8.55 மணி முதல் வாங்குவதற்குக் கிடைக்கும். இந்த Realme X2 Pro Master Edition நாவோடோ புகாசாவாவால் (Naoto Fukasawa) வடிவமைக்கப்பட்டுள்ளது. இது Red Brick மற்றும் Concrete finishes-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வேரியண்ட் ஒற்றை ஸ்டோரேஜ் ஆப்ஷனில் மட்டுமே வருகிறது - 12GB + 256GB.


Realme X2 Pro Master Edition-ன் விலை, விற்பனை சலுகைகள்:

இந்தியாவில் Realme X2 Pro Master Edition ரூ. 34.999-யாக விலையிடப்பட்டுள்ளது. குறிப்பிட்டுள்ளபடி, இந்த போன், Flipkart மற்றும் Realme.com-ல் கிடைக்கும். விற்பனை இன்று இரவு 8.55 மணிக்கு தொடங்கும். மேலும் நுகர்வோர் முன்பே பதிவுசெய்து முகவரி மற்றும் கட்டண விவரங்களை நிரப்ப பரிந்துரைக்கப்படுகிறது.

Bajaj Finserv-ல் இருந்து no-cost EMI ஆப்ஷன்கள், MobiKwik-ல் ரூ. 1,000 மதிப்புள்ள 10 சதவீத supercash, Cashify வழியான போன் எக்ஸ்சேஞ்-க்கு ரூ. 500 கூடுதல் தள்ளுபடி மற்றும் ரூ. 11,500 மதிப்புள்ள ஜியோ பலன்கள் ஆகியவற்றை Realme.com வழங்குகிறது. 

ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டில் 5 சதவீதம் அன்லிமிட்டெட் கேஷ்பேக், ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுடன் EMI-க்கு 5 சதவீதம் உடனடி தள்ளுபடி, ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டுடன் 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடி மற்றும் no-cost EMI ஆப்ஷனை Flipkart வழங்குகிறது.


Realme X2 Pro Master Edition-ன் விவரக்குறிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Realme X2 Pro Master Edition, ColorOS 6.1 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. இது 6.5-inch full-HD+ (1080x2400 pixels) Super AMOLED Fluid டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 12GB RAM உடன் இணைக்கப்பட்டு Qualcomm Snapdragon 855+ octa-core SoC-யால் இயக்கப்படுகிறது. Realme X2 Pro Master Edition-ல் 256GB (UFS 3.0) ஸ்டோரேஜ் உள்ளது.

Realme X2 Pro Master Edition-ல் six-piece, f/1.8 lens உடன் 64-megapixel Samsung ISOCELL Bright GW1 முதன்மை சென்சார் ஆகியவை quad rear கேமரா அமைப்பில் உள்ளது. f/2.5 telephoto lens உடன் 13-megapixel இரண்டாம் நிலை சென்சார், f/2.2 aperture உடன் 115-degree ultra-wide-angle லென்ஸோடு 8-megapixel மூன்றாம் நிலை சென்சார் மற்றும் 2-megapixel depth சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகளுக்காக, முன்புறத்தில் f/2.0 lens உடன் 16-megapixel Sony IMX471 கேமரா சென்சார் உள்ளது. இது portrait shots-ஐ முன் கேமரா ஆதரிக்கிறது.

Realme X2 Pro-வில் 50W SuperVOOC Flash சார்ஜ் ஆதரவுடன் 4,000mAh பேட்டரியை ரியல்மி வழங்குகிறது. மேலும், 18W USB PD மற்றும் Quick சார்ஜ் ஆதரவும் உள்ளது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். போனில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light, gyroscope, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகிய சென்சார்கள் அடங்கும். இந்த போன் 161x75.7x8.7mm அளவீட்டையும், 199 கிராம் எடையையும் கொண்டதாகும். 

Realme X2 Pro Master Edition Sale Date Revealed

Realme X2 Pro With Snapdragon 855+ SoC, Quad Rear Cameras Launched: Price, Specifications

 • Design
 • Display
 • Software
 • Performance
 • Battery Life
 • Camera
 • Value for Money
 • Good
 • Premium build quality and design
 • Stereo speakers sound good
 • Smooth app, gaming performance
 • Good battery life, super-fast charging
 • Vivid 90Hz display
 • Bad
 • Heats up under load
 • Low-light video quality isn’t great
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 855+
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2400 pixels
கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. ஒன்பிளஸ் 8-ன் அடுத்த விற்பனை ஜூன் 4 ஆம் தேதி தொடங்குகிறது!
 2. நோக்கியாவின் மூன்று புதிய போன்கள் அறிமுகம்!
 3. இன்பினிக்ஸ்-ன் இரண்டு ஸ்மார்ட்போன்கள் நான்கு பின்புற கேமராக்களுடன் அறிமுகம்!
 4. விவோ எக்ஸ் 50 சீரிஸின் விவரங்கள் கசிந்தன!
 5. பிஎஸ்என்எல்-ன் ரூ.1,599 மற்றும் ரூ.899 ரீசார்ஜ் ப்ளான்கள் அறிமுகம்!
 6. ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் மீண்டும் எப்போது கிடைக்கும்?
 7. 43 இன்ச் ஸ்மார்ட் டிவியை அடுத்த வாரம் கொண்டு வருகிறது நோக்கியா!
 8. சாம்சங் இரண்டு புதிய போன்களை குறைந்த விலையில் கொண்டு வருகிறது!
 9. 20 நாட்கள் பேட்டரி ஆயுளுடன் இந்தியாவுக்கு வருகிறது Amazfit T-Rex!
 10. ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 விற்பனை ஒத்திவைப்பு!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com