இந்தியாவில் ஏப்ரல் 1 முதல், புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, ஸ்மார்ட்போன்களில் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. முன்னதாக, Xiaomi, Poco மற்றும் Oppo போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் ஜிஎஸ்டி உயர்வுக்குப் பிறகு விலைகளை திருத்திய நிலையில், தற்போது ரியல்மியும் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தியுள்ளது. H2 2018-க்குப் பிறகு Realme-யின் முதல் விலை உயர்வு இதுவாகும்.
இந்தியாவில் Realme 6-ன் விலை அனைத்து வேரியண்டுகளும் ரூ.1000 உயர்ந்துள்ளது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை இப்போது ரூ.13,999-யாககவும், 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.15,999-யாகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.16,999-யாகவும் உயர்ந்துள்ளது.
Realme 6 Pro-வின் விலையும் ரூ.1,000 உயர்ந்துள்ளது. இந்தியாவில், 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.17,999-யாகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.18,999-யாகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999-யாகவும் உள்ளது.
ஸ்மார்ட்போன் மாடல் | பழைய விலை (ரூ.) | புதிய விலை (ரூ.) |
---|---|---|
Realme 6 Pro | 16,999 | 17,999 |
Realme 6 | 12,999 | 13,999 |
Realme 5i | 8,999 | 9,999 |
Realme C3 | 6,999 | 7,499 |
Realme X2 | 16,999 | 17,999 |
Realme X2 Pro | 29,999 | 29,999 |
Realme X2 Pro Master Edition | 34,999 | 36,999 |
Realme 5i விலை ரூ.9,999-யில் இருந்து ரூ.1,000 உயர்ந்து இப்போது ரூ.10,999-யாக உள்ளது. அதேபோல், Realme C3-யின் விலை ரூ.500 அதிகரித்து, இப்போது ரூ.7,499-யாக உள்ளது. Realme X2-வின் விலை ரூ.1,000 உயர்வு. ஆனால்,Realme X2 Pro-வின் விலை அப்படியே உள்ளது. மேலும், Realme X2 Pro Master Edition-ன் விலையை ரூ.2,000 உயர்ந்து இப்போது ரூ.36,999-யாக உள்ளது. ரியல்மியின் பழைய போன்களின் விலையும் ரூ.1000 உயர்வு: Realme 5, Realme 5s, Realme 5 Pro, Realme X மற்றும் Realme XT ஆகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்