Redmi Note 8 Pro-வானது வெள்ளை நிறத்தில் ஆரா வடிவமைப்பில் இருக்கிறது. பெட்டியின் உள்ளே சிம் எஜக்டர் பின், புக்லெட், டி.பி.ஓ கேஸ், அதேபோன்று 18W fast charging உடன் USB Type-C கேபிளும் உள்ளது. போனின் வலது புறத்தில், பவர் பொத்தான், வால்யூம் பொத்தானும், மேல் பகுதியில் இரண்டாம்நிலை மைக் மற்றும் IR blaster இருக்கிறது. போனின் இடது புறத்தில், இரண்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு ஸ்லாட்டில் ஒரு சிம்மும், மற்றோரு ஸ்லாட்டில் ஒரு சிம் மற்றும் micro SD card-டையும் சேர்த்து மொத்தம் மூன்று ஆப்ஷன் கொடுத்துள்ளனர். போனின் கீழ் பகுதியில் 3.5mm headphone jack, Type-C போர்ட், முதன்மை மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கரும் இதில் இருக்கிறது.
விவரக்குறிப்புகள்:
இதில் MediaTek வழங்கும் Helio G90T என்று சொல்லக்கூடிய சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இது gaming-கிற்காக கொண்டுவரப்பட்ட பிராசசர் என்றும் சொல்லப்படுகிறது. இதில் 2X cortex A76 powerful cores மற்றும் 6X cortex A55 power efficient cores கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் gbo-வானது Mali-G76MC4 ஆக உள்ளது. MediaTek இயக்கக்கூடிய Hyper Engine என்ற கேமிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். இது கேமிங்கை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்வதற்கான முயற்சியாக இருக்கிறது. ஸ்டோரேஜைப் பொருத்தவரை 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வேரியண்டாக உள்ளது. இதன் அடுத்த மாடலாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்டும் உள்ளது. முதல் முறையாக ரெட்மி போனில் 4,500mAh கொண்ட பெரிய பேட்டரியைக் கொடுத்துள்ளனர். மேலும் Liquid Cooling தொழிழ்நுட்பமும் இதில் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
கேமரா:
இதில் நான்கு பின்புற கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நான்கு கேமராவுக்கு கீழே தான் fingerprint sensor உள்ளது. இதில் முதன்மை கேமராவில் 64 மெகாபிக்சல் உள்ளது. அடுத்ததாக 8 மெகாபிக்சல் wide-angle சென்ஸும், மூன்றாவதாக இரண்டு 2 மெகாபிக்சல் கேமராவில் ஒன்று மேக்ரோவிற்கும், மற்றோன்று டெப்த் சென்சாருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபிக்காக 20 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 6.53-inch full-HD+ (1080x2340 pixels) டிஸ்புளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் Android Pie அடிப்படையிலான MIUI 10-ல் இயங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்