ஜியோமி நிறுவனம் புதிய ரெட்மி 6 மொபைலை அறிமுகம் செய்துள்ளது. வழக்கமாக தரம் நிறைந்த ஸ்மார்ட் ஃபோன்களின் விலை குறைந்தது ரூ. 10,000-ஆவது இருக்கும். ஆனால், இந்த மொபைல் ரூ. 7,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெளிப்புறத்தில் ப்ளாஸ்டிக்கால் இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 5.45 இன்ச் டிஸ்ப்ளே இதில் உள்ளது. நோடிஃபிகேஷ்ன் எல்.இ.டி. லைட்டுகள் இதில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. பின்புறமும் இது ப்ளாஸ்டிக்கால் கவர் செய்யப்பட்டுள்ளது. வலது பக்கம் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் உள்ளன. இவை சிறப்பாக உள்ளதென்று வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இடது பக்கத்தில் இரண்டு சிறிய அறைகள் உள்ளன. ஒன்று சிம் கார்டுக்கும், இன்னொன்று மெமரி கார்டுக்கும் இந்த அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 3.5 எம்.எம். ஹெட்ஃபோன் ஜாக், எல்.இ.டி. ஃப்ளாஷ், ஃபிங்கர் ப்ரின்ட் ஸ்கேன்னர், உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்கள்.
மொத்தம் 146 கிராம் எடை கொண்ட ரெட்மி 6-ல் 3,000 திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை வெளியே ரிமூவ் செய்ய முடியாது. 5 வாட்ஸ் சார்ஜர் இதனுடன் அளிக்கப்படுகிறது. ஹெட்ஃபோன் இல்லை.
பெரும்பாலான ரெட்மி ஃபோன்களில் குவால்கம் ஸ்நாப் ட்ராகன் ப்ராசஸர் உண்டு. ஆனால் ரெட்மி 6-ல் மீடியா டெக் ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 3 ஜி.பி. ராம் மெமரியுடன், 32 மற்றும் 64 ஜி.பி. ஸ்டோரேஜ் கொண்ட 2 வகை போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. இதில் அதிகபட்சம் 256 ஜி.பி. மெமரி கார்டை பொருத்த முடியும்.
பின்பக்கம் 12 மெகா பிக்ஸலும், முன்பக்கம் 5 மெகா பிக்ஸலும் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. டுயல் ஆப் முறையில் வாட்ஸப், ஃபேஸ்புக் பயன்படுத்தும் வசதி, ஆப் லாக் ஆகியவை ரெட்மி 6-ல் உள்ளது.
சாதாரண ஆப்-களை பயன்படுத்தும்போது வேகமாகவும், சற்று அதிக மெமரி கொண்ட ஆப்-களை பயன்படுத்தும்போது சிறிது மெதுவாகவும் ரெட்மி 6 இயங்குகிறது. ரெட்மி 6-ல் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீழே காணலாம்.
முடிவாக…
ரெட்மி 6-ன் ஆரம்ப விலை ரூ. 7,999. இந்த விலையில் சிறப்பாக செயல்படும் வசதிகள் இதில் உள்ளன. 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. ஸ்டோரேஜ் உள்ளிட்டவற்றை பார்க்கும்போது குறைந்த விலையில் சற்று தரம் கொண்ட மொபைலாக ரெட்மி 6 உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்