இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வரும் Realme X2! - விவரங்கள் உள்ளே...

இந்தியாவில் Realme X2-வின் முதல் விற்பனை நாளை மதியம் 12 மணிக்கு Flipkart மற்றும் Realme India website வழியாகத் தொடங்கும்.

இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வரும் Realme X2! - விவரங்கள் உள்ளே...

Realme X2, Pearl Blue, Pearl Green மற்றும் Pearl White வண்ண விருப்பங்களில் வருகிறது

ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் Realme X2-வின் அடிப்படை வேரியண்ட் ரூ. 16,999/-
  • இது octa-core Qualcomm Snapdragon 730G SoC-யால் இயக்கப்படுகிறது
  • Realme X2, notch-ல் 32-megapixel செல்ஃபி கேமராவை வைத்திருக்கிறது
விளம்பரம்

Realme X-ன் தொடர்ச்சியான Realme X2 இந்த வார தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, இந்த போன் நாட்டில் விற்பனைக்கு வர உள்ளது. இந்தியாவில் முதல் Realme X2 விற்பனை, நாளை ரியல்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட் வழியாக சில சலுகைகளுடன் நடத்தப்படும்.


இந்தியாவில் Realme X2-வின் விலை, விற்பனை சலுகைகள்:

இந்தியாவில் Realme X2-வின் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 16,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 18.999-யாக விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. டாப்-ஆஃப்-லைன், 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 19,999 விலைக் குறியுடன் வருகிறது. மூன்று வகைகளும் Pearl Blue, Pearl Green மற்றும் Pearl White வண்ண விருப்பங்களில் வருகின்றன. மேலும், இந்த போன், Flipkart மற்றும் Realme India online store வழியாக கிடைக்கும். மேற்கூறிய தளங்களில், இந்த விற்பனை நாளை மதியம் 12 மணிக்கு தொடங்கும்.

Realme X2-வின் அறிமுக சலுகைகளில், ICICI வங்கி கிரெடிட் கார்டில் ரூ. 1,500 உடனடி தள்ளுபடி, ரூ. 1,500 வரை MobiKwik பலன்கள், 6 மாதங்கள் வரை no-cost EMI மற்றும் ரூ.11,500 வரை ஜியோ பலன்கள் ஆகியவை அடங்கும். Cashify-ல் ரூ. 500 மதிப்புள்ள கூடுதல் எக்ஸ்சேஞ் தள்ளுபடியும் அட்டவணையில் உள்ளது.


Realme X2-வின் சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Realme X2, ColorOS 6.1 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. இது 19.5:9 aspect ratio மற்றும் 91.5 percent screen-to-body ratio உடன் 6.4-inch full-HD+ (1080x2340 pixels) Super AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போனில், Corning Gorilla Glass 5 பாதுகாப்பும் உள்ளது. மேலும், கண் பராமரிப்புக்காக DC-like dimming மற்றும் night mode போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. மேலும், in-display fingerprint சென்சாரும் உள்ளது. Realme X2, Adreno 618 GPU மற்றும் 8GB RAM வரை இணைக்கப்பட்டு, Qualcomm Snapdragon 730 SoC-யால் இயக்கப்படுகிறது.

Realme X2-வின் குவாட் ரியர் கேமரா அமைப்பில் f/1.8 lens உடன் 64-megapixel முதன்மை சென்சார் மற்றும் f/2.25 super-wide angle lens உடன் 8-megapixel இரண்டாம் நிலை சென்சார் ஆகியவை அடங்கும். கேமரா அமைப்பில் f/2.4 aperture உடன் 2-megapixel macro shooter மற்றும் f/2.4 lens உடன் 2-megapixel depth சென்சார் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோவுக்கு, f/2.0 lens உடன் 32-megapixel செல்ஃபி கேமராவை பேக் செய்கிறது.

Realme X2, கேமரா அம்சங்களின் பட்டியலைக் கொண்டுள்ளது. இதில் 64MP mode, Super Nightscape, Panorama, HDR Super Wide-angle மற்றும் Super Macro Mode ஆகியவை அடங்கும். 30fps பிரேம் வீதத்தில் 4K வரை தெளிவுதிறன் கொண்ட வீடியோக்களை பதிவுசெய்யும் திறன் இந்த போனில் உள்ளது.

மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கக்கூடிய 64 ஜிபி மற்றும் 128 ஜிபி UFS2.1 ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரியல்மி வழங்கியுள்ளது. இந்த போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, dual-band Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். ஆன்போர்டு சென்சார்களில் accelerometer, ambient light, gyroscope, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும்.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium looks, good build quality
  • Good cameras
  • Very fast charging
  • Smooth gaming performance
  • Bad
  • Low-light video recording could be better
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. Apple M5 MacBook Pro லான்ச் டீஸ்: தேதி, எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் விலை விவரம்
  2. Game of Thrones ஃபேன்ஸ், ஏத்துங்க! Realme 15 Pro 5G GOT Edition Rs. 41,999ல வந்திருக்கு
  3. WhatsApp Status Questions அம்சம்: Android Beta-வில் வெளியீடு
  4. விறுவிறுப்பான Display அனுபவத்துடன் வருகிறது Lava Shark 2. 120Hz refresh rate, 50MP camera
  5. iQOO ரசிகர்களுக்கு விருந்து! Pad 5e, Watch GT 2, TWS 5 வெளியீடு: தேதி மற்றும் Key Specs இங்கே!
  6. மோட்டோரோலா Android 16 வந்திருக்கு! Edge 60 Pro, Fusion முதல்ல அப்டேட், Notification Grouping, Instant Hotspot
  7. Lava Shark 2 வருது! பிளாக், சில்வர் கலர்ஸ், 50MP AI கேமரா உடன் கிளாஸி லுக்
  8. சாம்சங் Galaxy F36, M36-க்கு One UI 8 அப்டேட்! Android 16-ஓட வந்திருக்கு, இப்பவே செக் பண்ணுங்க
  9. Samsung ஃபோன் வாங்க சரியான நேரம்! Galaxy S24 FE உட்பட பிரீமியம் மாடல்களில் Rs. 28,000 வரை சேமிக்க வாய்ப்பு
  10. கட்டிங் எட்ஜ் All-in-One PC மாடல்களில் Rs. 24,990-லிருந்து ஆரம்பிக்கும் அதிரடி சலுகைகள்! HP, ASUS, Lenovo மாடல்களை குறைந்த விலையில்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »