Realme X2 Pro போனுக்காக, ரியல்மி அதன் ஜனவரி OTA அப்டேட்டை வெளியிடுகிறது. மேலும், இந்த அப்டேட் டிசம்பர் 2019 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்புடன் வருகிறது. OTA-வின் தன்மையை உறுதி செய்வதற்காக, இந்த அப்டேட் ஒரு பகுதியாக வெளிவருகிறது. சமீபத்திய Realme X2 Pro அப்டேட்டுக்கான பதிப்பு எண் RMX1931EX_11_A.08 ஆகும். இந்த போன் கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இது 64 மெகாபிக்சல் குவாட் கேமரா அமைப்பு, 50W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் 855+ SoC ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதற்கிடையில், Realme X2 அதன் ஜனவரி OTA அப்டேட்டையும் பெறுகிறது. இது Realme X2 Pro-வுக்கு இணையாக சேஞ்லாக்கை கொண்டுள்ளது. Realme X2 அப்டேட்டுக்கான பதிப்பு எண் RMX1992EX_11_A.17.
Realme X2 Pro, ஜனவரி 2020 OTA அறிவிப்பு சமூக மன்றங்களில் வெளியிடப்பட்டது. குறிப்பிட்டுள்ளபடி, இந்த அப்டேட் பகுதி பகுதியாக வெளிவருகிறது. OTA இன்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு தோராயமாக வெளியேற்றப்படும். மேலும், முக்கியமான பிழைகள் ஏதும் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னர், சில நாட்களில் பரந்த அளவில் வெளியேற்றப்படும். சிக்கலான பிழைகள் எதுவும் காணப்படவில்லை எனில், எதிர்வரும் நாட்களில் முழு வெளியீடு நிறைவடையும்.
உங்கள் போனில் அப்டேட் அறிவிப்பைத் தேடுங்கள், அதைப் பெறவில்லை எனில், Settings-ல் மேனுவலாக அப்டேட்டை சரிபார்க்கவும். சமீபத்திய Realme X2 Pro அப்டேட்டின் அளவு 3.07 ஜிபி ஆகும். இந்த அப்டேட்டை வலுவான வைஃபை இணைப்பின் கீழ் பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும், போன் சார்ஜில் இருக்கும் போது அதை இன்ஸ்டால் செய்ய பரிந்துரைக்கிறோம்.
சேஞ்ச்லாக்கைப் பொறுத்தவரை, Realme X2 Pro அப்டேட் ஒரு புதிய செயல்பாட்டைச் சேர்க்கிறது, இதில் சமீபத்திய task interface-ல் துவக்கத்திற்குத் திரும்புவதற்கு வெற்றுப் பகுதியைக் கிளிக் செய்யலாம். notification center-ல் டார்க் மோடின் புதிய வேக சுவிட்ச் மாற்று உள்ளது. மேலு,ம் அழைப்பு அம்சத்தில் ஃபிளாஷ் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் வீடியோ மோடின், புதிய HDR அம்சத்தைக் கொண்டுவருகிறது. மேலும், அதன் தன்மையை மேம்படுத்த பகுதி சிக்கல்களை சரிசெய்கிறது.
Realme X2-க்கு வருகையில், நிறுவனம் ஜனவரி OTA அப்டேட்டை ஒரு மன்ற பதிவில் அறிவித்தது. இது மூன்றாம் தரப்பு செயலிகளில் குரல் அழைப்பு தரத்தை மேம்படுத்துதல், முன் கேமராவின் உகந்த Nightscape தரம், Theme Store-ல் மேம்படுத்தப்பட்ட எழுத்துரு மாற்ற ஆதரவு, notification centre-ல் டார்க் மோட் ஃபாஸ்ட் சுவிட்ச் நிலைமாற்றம், டிசம்பர் 2019 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பு ஆகியவற்றைக் கொண்டுவருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்