ஸ்மார்ட்போன் சந்தையானது. சியோமி மற்றும் ஹானர் போன்ற முக்கிய நிறுவனங்களால் நிறைந்துள்ளது. இருப்பினும் ரியல்மி போன்ற வளரும் நிறுவனங்கள் முன்னேறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை ரியல்மி யு1 நிரூபித்துள்ளது. ரியல்மி தனது போர்ட்ஃபோலியோவில் மேலும் ஒரு சீரிஸை இணைத்துள்ளது.
இதன் முதல் மாடலான ரியல்மி யு1ன் விலை ரூ.11,999 ஆகும். அந்நிறுவனத்தின் முதல் 'செல்ஃபி ப்ரோ' ஸ்மார்ட்போனாகும்.
ரியல்மி யு1 ஆனது சியோமியின் ரெட்மி ஒய் சீரிஸ் உடன் போட்டியிடுகிறது. ரெட்மி ஒய் சீரிஸூம் செல்ஃபியை முக்கிய அம்சமாகக் கொண்டது.
6.3 இன்ச் திரையினைக் கொண்டுள்ள ரியல்மி யு1 450nit பிரகாசத்தினைக் பெற்றுள்ளது. இதன் மூலம் சூரிய வெளிச்சத்திலும் திரையினை தெளிவாக பார்க்கலாம். ஐபிஎஸ் பேனலான இது 1080*2340 பிக்சலினைக் கொண்டுள்ளது.
இதன் மூலம் தெளிவான வண்ணத்தில் மற்றும் கூர்மையான படத்தினை பெறமுடியும். முன்பக்கத்தில் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பினைக் கொண்டுள்ளது. இதிலிருக்கும் வாட்டர் டிராப் நாட்ச் அழகாக உள்ளது. ஒரு கேமரா நாட்ச் உள்ளது. குறைவான இடமே இருப்பதால் அறிவிப்பு வந்ததும் வெளிப்படும் எல்இடி இல்லை.
நமது ரிவியூவில் கருப்பு நிற போன் காட்டப்பட்டுள்ளது, இருப்பினும் நீங்கள் புளூ மற்றும் கோல்ட் நிறத்தில் இந்த போனினை பெறலாம். இதிலிருக்கும் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடனடியாக செயல்படுகிறது.
ரியல்மி யு1னின் முக்கியம்சம் மற்றும் மென்பொருள்
ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ரியல்மி யு1.
இந்த ஸ்மார்ட்போன் உலகில் முதல்முறையாக மீடியாடெக் ஹீலியோ பி70 SoC கொண்டுள்ளது. இதுவரை ரியல்மி யு1 நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
ரியல்மி யு1ன் டிசைன்
ரியல்மி யு1 ஆனது பார்பதற்கு ரியல்மி 2 ப்ரோ (ரூ. 13,990) வினை போலவே இருக்கும். வளைந்த முனைகள் நல்ல பிடிமானத்தைக் கொடுக்கிறது.
பின்புறம் கொடுக்கப்பட்டிருக்கும் மேட் பூச்சு போன் கையில் இருந்து வழுவமல் பார்த்துக் கொள்கிறது. 8mm தடிமனானது, ரியல்மி யு1-ன் எடை குறைவு என்பதால் எளிதாக பற்றிக் கொள்ளலாம். பவர் மற்றும் ஒலியினை கூட்ட குறைக்க உதவும் பட்டன்கள் சரியான இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.
இடதுபக்கம் இருக்கக்கூடிய சிம் டிரேயானது இரு நானோ சிம்கள் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டுகளை பயன்படுத்தும் வசதியினைக் கொண்டுள்ளது. ரியல்மி யு1ன் அடிப்பாகத்தில் ஸ்பீக்கர் கிரில், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5 mm ஹெட்போன் சாக்கெட்டினைக் கொண்டுள்ளது.
இதில் யுஎஸ்பி டைப் சி இல்லாதது சிறிய குறையே. இதிலிருக்கும் முக்கிய குறைபாடு என்னவென்றால், ஸ்பீக்கர் அடிப்பாகத்தில் இருப்பதால் கிடைமட்டமாக போனை பிடிக்கும்போது ஒலி தடைபடுவதாகும்.
ரியல்மி யு1-னினைக் கிடைமட்டமாக பிடிக்கும் போது ஸ்பீக்கருக்காக கொடுக்கப்பட்டிருக்கும் துளை அடைபடுகிறது.
ரியல்மி யு1னின் முக்கியம்சம் மற்றும் மென்பொருள்
ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ரியல்மி யு1.
இந்த ஸ்மார்ட்போன் உலகில் முதல்முறையாக மீடியாடெக் ஹீலியோ பி70 SoC கொண்டுள்ளது. இதுவரை ரியல்மி யு1 நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்