Realme X2 Pro கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சில சுவாரஸ்யமான விவரக்குறிப்புகளில் ரூ. 29.999 விலையில் தொடங்குகிறது. Realme flagship இன்று முதல் முறையாக சில சலுகைகளுடன் விற்பனைக்கு வரும்.
இந்தியாவில் Realme X2 Pro-வின் விலை, சலுகைகள்:
Realme X2 Pro-வின் 8GB + 128GB வேஎரியண்டின் விலை ரூ. 29,999-யாகவும், அதேசமயம் higher-end 12GB + 256GB வேரியண்ட் ரூ. 33,999-யாக விலை நிர்ணயிக்கப்படுள்ளது. Lunar White மற்றும் Neptune Blue வண்ண விருப்பங்களில் Realme X2 Pro வருகிறது. மேலும், இந்த போன் Flipkart மற்றும் Realme online store மூலம் கிடைக்கும். The sale will start at 12pm (noon) IST and go on till November 27 11:59pm IST. இந்த விற்பனை மதியம் 12 மணிக்கு தொடங்கி, நவம்பர் 27 இரவு 11:59 மணி வரை நடைபெறும்.
Realme X2 Pro-வின் விற்பனை சலுகைகளில் 6 மாதங்கள் வரை no-cost EMI மற்றும் ரூ. 11,500 மதிப்புள்ள ஜியோ பலன்கள் ஆகியவை அடங்கும். 3 மற்றும் 6 மாதங்களுக்கு no-cost EMI பலன்களுடன் card-less credit ஆப்ஷனையும் பிளிப்கார்ட் வழங்குகிறது. Realme online store-ல் முதல் 1,000 வாடிக்கையாளர்களுக்கு 7-நாளில் திருப்பித்தரும் வசதியை ரியல்மி வழங்குகிறது.
Realme X2 Pro-வின் விவரக்குறிப்புகள்:
டூயல்-சிம் (நானோ) Realme X2 Pro, ColorOS 6.1 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. 20:9 aspect ratio மற்றும் 90Hz refresh rate உடன் 6.5-inch full-HD+ (1080x2400 pixels) Super AMOLED Fluid டிஸ்பிளே அம்சத்தைக் கொண்டுள்ளது. 12GB RAM மற்றும் 256GB வரை இணைக்கப்பட்டு Qualcomm Snapdragon 855+ octa-core SoC-யால் இயக்கப்படுகிறது.
Realme X2 Pro-வின் quad rear கேமரா அமைப்பில், f/1.8 aperture உடன் 64-megapixel snapper மூலம் சிறப்பிக்கப்படுகிறது. இதற்கு 13-megapixel telephoto கேமரா, 8-megapixel ultra-wide-angle கேமரா மற்றும் 2-megapixel depth சென்சார் ஆகியவை உதவுகின்றன. அதே சமயம், செல்ஃபிகளுக்காக 16-megapixel முன் கேமரா, portrait shots-ஐ ஆதரிக்கிறது. Realme-யின் முதல் flagship போனானது, 50W SuperVOOC ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் 4,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
Realme X2 Pro-வின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். போனில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light, gyroscope, magnetometer, proximity சென்சார் மற்றும் அங்கீகாரத்திற்கான in-display fingerprint சென்சார் ஆகியவை அடங்கும். இந்த போன் 161x75.7x8.7mm அளவீட்டையும், சுமார் 199 கிராம் எடையையும் கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்