முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு வரும் Realme X2! 

முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு வரும் Realme X2! 

Realme X2-வானது Realme X-ன் தொடர்ச்சியாக வருகிறது

ஹைலைட்ஸ்
  • Realme X2, Flipkart, Realme.com மூலம் கிடைக்கும்
  • ரியல்mi போனில் மூன்று தனித்துவமான வண்ண விருப்பங்கள் உள்ளன
  • Realme X2, Qualcomm Snapdragon 730G SoC-யால் இயக்கப்படுகிறது
விளம்பரம்

Realme X2, இன்று இந்தியாவில் முதல் விற்பனைக்கு வருகிறது. மிகவும் பிரபலமான Realme X-ன் தொடர்ச்சியான புதிய ரியல்மி போன், ரியல்மி இந்தியாவின் வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட் மூலம் வாங்குவதற்கு கிடைக்கும். முதல் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கும்.


இந்தியாவில் Realme X2-வின் விலை, விற்பனை சலுகைகள்:

இந்தியாவில் Realme X2-வின் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 16,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 18.999-யாக விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. டாப்-ஆஃப்-லைன், 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 19,999 விலைக் குறியுடன் வருகிறது. மூன்று வகைகளும் Pearl Blue, Pearl Green மற்றும் Pearl White வண்ண விருப்பங்களில் வருகின்றன. மேலும், இந்த போன், Flipkart மற்றும் Realme.com online store வழியாக இன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும். 

Realme X2-வின் விற்பனை சலுகைகளில் ICICI கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பிளிப்கார்ட் மூலம் வாங்கினால் ரூ. 1,500 உடனடி தள்ளுபடி பொருந்தும். மேலும், பிளிப்கார்ட்டில் உள்ள வாடிக்கையாளர்கள் அனைத்து முக்கிய வங்கி கார்டுகலையும் பயன்படுத்தி ஆறு மாதங்கள் வரை no-cost EMI ஆப்ஷன்களைப் பெறலாம். முதல் விற்பனையின் போது 100 வாடிக்கையாளர்கள் Realme X2-வை இலவசமாக வெல்லும் வாய்ப்பை Realme வழங்கவுள்ளது.

Realme.com online store மூலம் Realme X2 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,000 வரை 10 சதவீத SuperCash-ஐப் பெற உரிமை உண்டு. மேலும், ரூ. 500 வரையிலாக கேஸ்பேக்கை MobiKwik மூலம் இரண்டு போன்களுக்கும் பயன்படுத்தலாம். Bajaj Finserv-வின் no-cost EMI ஆப்ஷனும் உள்ளது. மேலும், ரூ. 500 மதிப்புள்ள கூடுதல் எக்ஸ்சேஞ் தள்ளுபடியை Cashify வழியாக பெறலாம்.


Realme X2, ரூ. 11,500 மதிப்புள்ள ஜியோ சலுகை பலன்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது. ரூ. 349 ப்ளானின் 12 ரீசார்ஜ்களுக்கு, ரூ. 5,500 மதிப்புள்ள கூப்பன் பலன்களுடன், ஜியோ பயனர்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை கூடுதலாக பெறுவார்கள்.

Crocs stores-ல் கிடைக்கும் புதிய பங்குகளில் 30 சதவீத தள்ளுபடி (ரூ .500 வரை) போன்ற சலுகைகளுடன்,  Zoomcar மீது 2,000 அல்லது 20 சதவீதம் தள்ளுபடி மற்றும் Cleartrip.com மீது ரூ. 3,000 மதிப்புள்ள பலன்களையும் ரியல்மி வழங்குகிறது.


Realme X2-வின் சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Realme X2, ColorOS 6.1 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. இது 19.5:9 aspect ratio மற்றும் 91.5 percent screen-to-body ratio உடன் 6.4-inch full-HD+ (1080x2340 pixels) Super AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போனில், Corning Gorilla Glass 5 பாதுகாப்பும் உள்ளது. மேலும், கண் பராமரிப்புக்காக DC-like dimming மற்றும் night mode போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. மேலும், in-display fingerprint சென்சாரும் உள்ளது. Realme X2, Adreno 618 GPU மற்றும் 8GB RAM வரை இணைக்கப்பட்டு, Qualcomm Snapdragon 730 SoC-யால் இயக்கப்படுகிறது.

Realme X2-வின் குவாட் ரியர் கேமரா அமைப்பில் f/1.8 lens உடன் 64-megapixel முதன்மை சென்சார் மற்றும் f/2.25 super-wide angle lens உடன் 8-megapixel இரண்டாம் நிலை சென்சார் ஆகியவை அடங்கும். கேமரா அமைப்பில் f/2.4 aperture உடன் 2-megapixel macro shooter மற்றும் f/2.4 lens உடன் 2-megapixel depth சென்சார் உள்ளது. செல்ஃபிகளுக்கு, இந்த போன் f/2.0 lens உடன் 32-megapixel செல்ஃபி கேமராவை பேக் செய்கிறது.

மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கக்கூடிய 64 ஜிபி மற்றும் 128 ஜிபி UFS2.1 ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரியல்மி வழங்கியுள்ளது. இந்த போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, dual-band Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். ஆன்போர்டு சென்சார்களில் accelerometer, ambient light, gyroscope, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும். தவிர, 30W VOOC 4.0 ஃப்ளாஷ் சார்ஜிங் தொழில்நுட்ப ஆதரவுடன் 4,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

Realme X2 Review

Realme X2 to Get Android 10-Based ColorOS 7 Update in March Next Year

Realme X2 vs Redmi Note 8 Pro vs Redmi K20: Price, Specifications Compared

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium looks, good build quality
  • Good cameras
  • Very fast charging
  • Smooth gaming performance
  • Bad
  • Low-light video recording could be better
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »