இந்தியாவில், Realme 5s ஸ்மார்ட்போனுடன் Realme X2 Pro புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. Realme X2 Pro என்பது premium flagship போன் ஆகும். இது லைன் விவரக்குறிப்புகளை வழங்குகிறது. OnePlus 7T மற்றும் Redmi K20 Pro போன்றவற்றுடன் Realme X2 Pro போன் போட்டியிடும்.
இந்தியாவில் Realme X2 Pro-வின் விலை:
இந்தியாவில் Realme X2 Pro-வின் 8GB + 128GB மாடலின் விலை ரூ. 29,999-ல் தொடங்குகிறது. அதே சமயம் high-end 12GB + 256GB மாடலின் விலை ரூ. 33,999-யாக உள்ளது. Naoto Fukasawa வடிவமைத்த Realme X2 Pro Master Edition இந்தியாவில் Red Brick மற்றும் Concrete finishes-ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்கள் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் மட்டுமே வருகின்றன. அதன் விலை ரூ. 34,999-யாக உள்ளது. இந்த போன் நவம்பர் 26 முதல் Flipkart மற்றும் Realme online store-ல் விற்பனைக்கு வரும். இந்தியாவில் Lunar White மற்றும் Neptune Blue gradient finishes-ல் கிடைக்கிறது. இந்த போன் விரைவில் ஆஃப்லைன் கடைகளிலும் கிடைக்கும். Master Edition அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து கிடைக்கும்.
வெளியீட்டு சலுகைகளில் 6 மாதங்கள் வரை no-cost EMI ஆப்ஷன்கள் மற்றும் ரூ .11,500 மதிப்புள்ள ஜியோ பலன்கள். பிளிப்கார்ட் 3 மற்றும் 6 மாதங்களுக்கு no-cost EMI பலன்களுடன் அட்டை இல்லாத கடன் விருப்பத்தை வழங்குகிறது. பயனர்கள் 12 மாத அட்டை இல்லாத கடன் விருப்பத்தையும் தேர்வு செய்யலாம். அதில் அவர்கள் மாதத்திற்கு ரூ. 2,500 EMI செலுத்தவேண்டும். இந்த புதிய கட்டண விருப்பம் OTP- அடிப்படையிலான தீர்வாகும். இது செயலாக்கத்தை செய்ய சுமார் இரண்டு நிமிடங்கள் ஆகும். மேலும் physical data verification தேவையில்லை.
Realme.com-ல் முதல் 1,000 வாடிக்கையாளர்களுக்கு 7 நாள் திரும்ப செலுத்தலை ரியல்மி வழங்குகிறது, மேலும் முதல் விற்பனையில் பங்கேற்பவர்களுக்கு ரூ. 1,799 மதிப்புள்ள Realme Buds Wireless இலவசமாக பெறலாம். முதல் விற்பனை நவம்பர் 26 மதியம் 12 மணிக்கு (நண்பகல்) தொடங்கி, நவம்பர் 27 இரவு 11:59 மணி வரை நடக்கும். இந்த விற்பனை அழைப்பிற்கு மட்டுமே வாடிக்கையாளர்கள் மற்றும் பிளைண்ட் ஆர்டர் பதிவு செய்த பயனர்களுக்கு மட்டுமே திறந்திருக்கும். இந்த அழைப்புகள் நவம்பர் 21 முதல் மதியம் 12 மணிக்கு (நண்பகல்) முதல், நவம்பர் 23 வரை Flipkart மற்றும் Realme.com வழியாக பயனர்களுக்கு கிடைக்கும். தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத்தும் (Madhav Sheth) இன்று தனது ட்விட்டர் கணக்கில் அழைப்புகளை வழங்கவுள்ளார்.
நினைவுகூர, Realme X2 Pro கடந்த மாதம் சீனாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த பிராந்தியத்தில் அதன் விலை CNY 2,699 (சுமார் ரூ .27,200)-ல் தொடங்குகிறது.
Realme X2 Pro-வின் விவரக்குறிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள்:
டூயல்-சிம் (நானோ) Realme X2 Pro, ColorOS 6.1 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. மேலும், 20:9 aspect ratio, 90Hz refresh rate, 135Hz touch sampling rate, 402ppi pixel density, DC dimming 2.0 தொழில்நுட்ப ஆதரவுடன் 6.5-inch full-HD+ (1080x2400 pixels) Super AMOLED Fluid டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. அதனுடன் 91.7 சதவீதம் screen-to-body ratio, அதேபோல் Corning Gorilla Glass 5 protection ஆகியவையும் உள்ளது.
Realme X2 Pro போன் 6GB, 8GB மற்றும் 12GB of LPDDR4X RAM உடன் Qualcomm Snapdragon 855+ octa-core SoC-யால் இயக்கப்படுகிறது. Realme X2 Pro 64GB (டூயல்-சேனல் UFS 2.1), 128GB (UFS 3.0) மற்றும் 256GB (UFS 3.0) ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது.
Realme X2 Pro-வில் six-piece, f/1.8 lens உடன் 64-megapixel Samsung ISOCELL Bright GW1 முதன்மை சென்சார் ஆகியவை quad rear கேமரா அமைப்பில் உள்ளது. f/2.5 telephoto lens உடன் 13-megapixel இரண்டாம் நிலை சென்சார், f/2.2 aperture உடன் 115-degree ultra-wide-angle லென்ஸோடு 8-megapixel மூன்றாம் நிலை சென்சார் மற்றும் 2-megapixel depth சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகளுக்காக, முன்புறத்தில் f/2.0 lens உடன் 16-megapixel Sony IMX471 கேமரா சென்சார் உள்ளது. portrait shots-ஐ முன் கேமரா ஆதரிக்கிறது.
Realme X2 Pro-வில் 50W SuperVOOC Flash சார்ஜ் ஆதரவுடன் 4,000mAh பேட்டரியை ரியல்மி வழங்குகிறது. வெறும் 33 நிமிடங்களில் தொலைபேசியை முழுமையாக சார்ஜ் செய்ய தனியுரிம தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், 18W USB PD மற்றும் Quick சார்ஜ் ஆதரவும் உள்ளது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும்.
Realme X2 Pro போனில் Dolby Atmos மற்றும் Hi-Res Audio தொழில்நுட்ப ஆதரவுடன் dual speakers உள்ளன. கூடுதலாக, in-display fingerprint சென்சாரும் உள்ளது. போனில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light, gyroscope, magnetometer மற்றும் proximity sensor ஆகியவை அடங்கும். இந்த போன் 161x75.7x8.7mm அளவீட்டையும், 199 கிராம் எடையையும் கொண்டதாகும். மேலும், vapour cooling (VC) system மற்றும் Hyperboost 2.0 போன்ற கூடுதல் அம்சங்களுடன் Realme X2 Pro வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்