Realme X2 Pro-வின் 6GB RAM வேரியண்ட் இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ. 27,999 ஆகும். இந்த போன் நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில், இது 8GB RAM மற்றும் 12GB RAM ஆப்ஷன்களில் மட்டுமே கிடைத்தது.
இந்தியாவில் Realme X2 Pro-வின் புதிய 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ. 27,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, 8GB + 128GB மற்றும் top-end 12GB + 256GB மாடல்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து கிடைக்கிறது. இதன் விலை முறையே ரூ 29,999 மற்றும் ரூ. 33,999 விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. புதிய 6GB RAM ஆப்ஷன் ஏற்கனவே Flipkart-ல் Lunar White மற்றும் Neptune Blue ஆப்ஷன்களில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், Realme.com-லும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. பிளிப்கார்ட், ரூ. 11,850 வரை எக்ஸ்சேஞ் தள்ளுபடி, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டில் 5 சதவீதம் அன்லிமிடெட் கேஷ்பேக், ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டில் 10 சதவீதம் தள்ளுபடி மற்றும் மாதத்திற்கு ரூ. 2,334 no-cost EMI ஆப்ஷன்கள் ஆகியவற்றை வழங்குகிறது.
Realme X2 Pro-வின் விவரக்குறிப்புகளில், 6.5-inch full-HD+ (1080x2400 pixels) Super AMOLED டிஸ்பிளே, Qualcomm Snapdragon 855+ octa-core SoC, 12GB RAM மற்றும் 256GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆகியவை அடங்கும். போனின் குவாட் ரியர் கேமரா அமைப்பில் f/1.8 aperture உடன் 64-megapixel snapper மூலம் வழிநடத்துகிறது. 13-megapixel telephoto lens, 8-megapixel ultra-wide-angle shooter மற்றும் 2-megapixel depth சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்புறத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்கு 32-megapixel கேமராவை waterdrop notch-ல் வைக்கப்பட்டுள்ளது. இது 50W SuperVOOC ப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் 4,000mAh பேட்டரையை பேக் செய்கிறது. இது ColorOS 6.1 உடன் Android Pie-ல் இயங்குகிறது. மேலும், 3.5mm audio jack மற்றும் USB Type-C port ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Realme X2 Pro With 64-Megapixel Quad Camera Setup, Snapdragon 855+ SoC Launched
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்