6 ஜிபி ரேம் வேரியேஷன் மொபைல் ரூ. 28,999ல் இருந்து ரூ. 24,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 13-ம் தேதி வரையில் இந்த சலுகை இருக்கும். இருப்பினும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 இன்டர்னல் மெமரி வேரியேஷன் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது நல்ல பேட்டரி திறனுடன், புத்தம் புதிய சிறப்பம்சங்களுடன் ரெட்மி 9 களத்தில் இறங்கவுள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்திருக்கிறது. இந்த நிலையில் ரெட்மி 9 வரவேற்பை பெற்று நல்ல விற்பனையை அடையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.