ரெட்மி நோட் 7 ப்ரோ இந்தியாவில் இன்று வெளியாகியுள்ளது. சுமார் 1 மாதத்திற்கு மேல் இந்த போன் பற்றிய தகவல்கள் தொடர்ந்து கசிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தான் இந்த ஸ்மார்ட்போன் முதலில் வெளியாகிறது.
இதனுடன் வெளியாகியுள்ள ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனை விட மேம்படுத்தப்பட்ட கேமராக்கள், பிராசஸர்கள் மற்றும் சேமிப்பு வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது.
ரெட்மி நோட் 7 ப்ரோ அறிமுக விலை (இந்தியா)
சியோமி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ரெட்மி நோட் 7 ப்ரோ, ஸ்மோர்பனுக்கு ஆரம்ப விலையாக ரூ.13,999 நிர்ணயம் செய்துள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதிகொண்ட இந்த மாடல் போனுக்கு ரூ.13,999 எனில், 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மாடல் ரூ.16,999 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
வரும் மார்ச் 13, மதியம் 12 மணி முதல் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ, நெப்டியூன் ப்ளூ, நெபூலா ரெட் மற்றும் ஸ்பேஸ் ப்ளாக் என்னும் மூன்று நிறங்களில் விற்பனைகுக வர உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எம்ஐ.காம், ஃபிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் கடைகளிலும் விற்பனை செய்யப்படும்.
இந்தியாவில் ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து ரெட்மி நோட் 7 ப்ரோ போன்களை வாங்குபவர்களுக்கு 1,120 ஜிபி (4ஜி) டேட்டாவை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இலவசமாக இந்த போனுடன் ஆல்ட்ரா ஸ்லிம் கேஸ் ஓன்று விற்பனை செய்யப்படுகிறது.
ரெட்மி நோட் 7 ப்ரோ அமைப்புகள்:
ரெட்மி நோட் 7 ப்ரோவுடன் வெளியான ரெட்மி நோட் 7 போனில் இடம்பெற்றிருந்த 'ஆஃரா டிசைனை' பெற்றுள்ளது. 6.3 இஞ்ச் ஃபுல் ஹெச்டி திரை, வாட்டர் ட்ராப் வகை நாட்ச் என அனைத்து முன்னணி அமைப்புகளையும் ரெட்மி ஸ்மார்ட்போன் பொற்றுள்ளது.
மேலும் 11nm ஆக்டா-கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸரால் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ பவரூட்டப்பட்டுள்ளது. இதர வசதிகளாக (4ஜிபி/ 6ஜிபி) ரேம் வகைகள் மற்றும் 6ஜிபி / 128ஜிபி சேமிப்பு வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. கேமரா சென்சார்களைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்சல் முதற்நிலை சென்சாரும், 5 மெகா பிக்சல் இரண்டாம் நிலை டெப்த் சென்சாரும் உள்ளன.
செயற்கை நுண்ணறிவு இந்த ஸ்மார்ட்போனில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபி வசதிக்காக முன்புறத்தில் 13 மெகா பிக்சல் ஃபிரன்ட் ஷூட்டரும், 4கே சப்போர்ட் உடைய வீடியோ பதிவு செய்யும் கேமராவும் உள்ளன. மேலும் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஆண்ட்ராய்டு பைய் போன்ற எம்ஐயூஐ 10 மென்பொருளில் இயங்குவதால் வேகமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் 4,000mAh பேட்டரி பவர், கியூவிக் சார்ஜ் சப்போர்ட், யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் போன்ற பல அப்டேட்களை இந்த போன் பெற்றுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்