ரெட்மி நோட் 9 ப்ரோ, 4ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.13,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.16,999 ஆகவும் உள்ளது.
ரெட்மி நோட் 9 ப்ரோ அடுத்த விற்பனை எப்போது? விலை, சிறப்பம்சங்கள் விவரம்!!
இந்தியாவில் வரும் ஜூன் 9ம் தேதி ரெட்மி நோட் 9 ப்ரோ போன் விற்பனைக்கு வர உள்ளது. இதனை அமேசான் மற்றும் எம்.காம் வலைதளங்களின் வழியாக மதியம் 12 மணிக்கு பெற்றுக்கொள்ளலாம். ரெட்மி நோட் 9 ப்ரோ முக்கிய அம்சங்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி SoC, 48 மெகாபிக்சல் குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் நீடித்த 5,020 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை அடங்கியுள்ளன. அரோரா ப்ளூ, ஒயிட் மற்றும் இன்டர்ஸ்டெல்லர் பிளாக் உள்ளிட்ட மூன்று வண்ண விருப்பங்களில் இந்த போன் ஆன்லைனில் கிடைக்கும். .
ரெட்மி நோட் 9 ப்ரோ அடுத்த விற்பனை ஜூன் 9 ஆம் தேதி அமேசான் இந்தியா மற்றும் எம்.காம் வழியாக மதியம் 12 மணிக்கு பெற்றுக்கொள்ளலாம். இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ, 4ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.13,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.16,999 ஆகவும் உள்ளது. இது அரோரா ப்ளூ, ஒயிட் மற்றும் இன்டர்ஸ்டெல்லர் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கும்.
ரெட்மி நோட் 9 ப்ரோ MIUI 11ல் இயக்குகிறது, 6.67 அங்குல முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே 20:9 விகிதம் கொண்டுள்ளது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி SoC, அட்ரினோ 618 ஜி.பீ.யூ மற்றும் 6 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் கொண்டுள்ளத. ரெட்மி நோட் 9 ப்ரோ 128 ஜிபி வரை யுஎஃப்எஸ் 2.1 சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளது, இதனை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் (512 ஜிபி வரை) விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.
48 மெகாபிக்சல் கேமிரா சென்சாருடன், அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் 8 மெகாபிக்சல் சென்சார், மேக்ரோ லென்ஸுடன் 5 மெகாபிக்சல் சென்சார் மற்றும் இறுதியாக 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவை பின்பக்க கேமரா அமைப்பில் உள்ளது. முன்பக்கத்தில், நீங்கள் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவை பெறுகிறீர்கள்.
பேட்டரியை பொறுத்தவரையில் இந்த போனில் 5,020 எம்ஏஎச் பேட்டரியை 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் உள்ளது. 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், நாவிக், ஒரு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஜேக் உள்ளது.
Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls
Sony and Guerrilla Games Reportedly Working on a New Killzone Project