இந்த புதிய பட்ஜெட் போன் குறைந்த விலை, பெரிய டிஸ்ப்ளே, நல்ல பேட்டரி, தினசரி பயன்பாட்டிற்கு பொருத்தமான அம்சங்கள் வழங்குகிறது இந்தியாவில் அறிமுகம் பெற்றது
Photo Credit: Lava
Lava Yuva Star 3 இந்தியாவில் அறிமுகமானது. இதன் 5000mAh பேட்டரி, 6.75-இன்ச் டிஸ்ப்ளே, 13MP கேமரா மற்றும் ₹7,499 விலை குறித்த அனைத்து தகவல்களையும் இந்த கட்டுரையில் காணலாம்
நம்ம ஊரு பிராண்ட் லாவா (Lava) இப்போ பயங்கரமான ஃபார்ம்ல இருக்காங்க. "எங்க காலம் வந்தாச்சு" அப்படின்னு சொல்ற மாதிரி, பட்ஜெட் விலையில அடுத்தடுத்து சூப்பரான போன்களை இறக்கிட்டு வராங்க. அந்த வரிசையில இப்போ ஒரு செம்ம பட்ஜெட் ஸ்மார்ட்போனை லான்ச் பண்ணிருக்காங்க, அதுதான் Lava Yuva Star 3. முதல்ல நம்ம எல்லாருக்கும் இருக்குற பெரிய கேள்வி - விலை என்ன? இந்த Lava Yuva Star 3 இந்தியாவில வெறும் ₹7,499-க்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கு. இதுல 4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் இருக்கு. நீங்க ஒரு புதுசா போன் வாங்கப்போறீங்க அல்லது கம்மி விலையில ஒரு தரமான செகண்டரி போன் தேடுறீங்கன்னா, உங்களுக்கு இது ஒரு சூப்பர் சாய்ஸ்.
இந்த போனை கையில பிடிக்கும்போதே ஒரு பிரீமியம் ஃபீல் கிடைக்குது. இதுல 6.75-இன்ச் HD+ பெரிய டிஸ்ப்ளே குடுத்திருக்காங்க. இதுல ஹைலைட்டே இதோட 90Hz ரிஃப்ரெஷ் ரேட் தான். சாதாரணமா இந்த பட்ஜெட்ல ஸ்க்ரோலிங் கொஞ்சம் லேக் ஆகும், ஆனா 90Hz இருக்குறதுனால ரொம்ப ஸ்மூத்தா இருக்கும். வீடியோஸ் பாக்குறதுக்கும், சோசியல் மீடியா யூஸ் பண்றதுக்கும் இது செம்ம வசதியா இருக்கும்.
நம்ம ஊரு மக்களுக்கு எப்பவும் பேட்டரி தான் மெயின். இந்த போன்ல 5000mAh பேட்டரி குடுத்திருக்காங்க. நீங்க ஒரு தடவை சார்ஜ் போட்டா, சாதாரணமாக ஒரு ஒன்றரை நாள் தாராளமா வரும். 10W சார்ஜிங் சப்போர்ட் மற்றும் டைப்-சி (Type-C) போர்ட் இதுல இருக்கு. லாவா நிறுவனம் இதோட அசுரத்தனமான பேட்டரி லைஃப் பத்தி ரொம்பவே பெருமையா சொல்லிருக்காங்க.
கேமராவை பொறுத்தவரைக்கும், பின்புறம் 13 மெகாபிக்சல் (13MP) AI பேக்டு மெயின் கேமரா இருக்கு. இது பகல் நேரங்கள்ல நல்லாவே போட்டோ எடுக்குது. செல்ஃபி பிரியர்களுக்காக முன்னாடி 5 மெகாபிக்சல் (5MP) கேமரா குடுத்திருக்காங்க. பட்ஜெட் போன்ங்கறதால பெரிய அளவுல எதிர்பார்க்க முடியாதுன்னாலும், இந்த விலைக்கு இது ஒரு நல்ல கேமரா செட்டப் தான்.
இதுல Unisoc SC9863A ஆக்டா-கோர் ப்ராசஸர் இருக்கு. கூடவே 4GB RAM இருக்குறதுனால நார்மலான வேலைகளுக்கு இது பக்காவா இருக்கும். இன்னும் ஒரு ஸ்பெஷல் விஷயம் என்னன்னா, இதுல Virtual RAM வசதியும் இருக்கு. அதாவது உங்க ஸ்டோரேஜ்ல இருந்து இன்னும் 4GB-யை ரேமா மாத்தி மொத்தமா 8GB RAM வரைக்கும் நீங்க யூஸ் பண்ணலாம். சாப்ட்வேர் சைடுல இது லேட்டஸ்ட் Android 15 Go Edition-ல ரன் ஆகுது, இதனால போன் ரொம்ப லைட்டா, வேகமா வேலை செய்யும்.
● IP64 ரேட்டிங்: தூசு மற்றும் லேசான தண்ணி தெளிப்புல இருந்து இந்த போனை பாதுகாக்கும். இந்த விலையில இது ஒரு பெரிய விஷயம்!
● பாதுகாப்பு: போனோட சைடுல ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint) குடுத்திருக்காங்க. இது ரொம்ப வேகமாவே போனை அன்லாக் பண்ணுது.
● கலர்ஸ்: இண்டஸ் பிளாக் (Indus Black) மற்றும் சியாச்சின் ஒயிட் (Siachen White) என ரெண்டு சூப்பர் கலர்ல இது கிடைக்குது.
லாவா நிறுவனம் இந்த போனுக்கு "Free Service at Home" அப்படிங்கிற ஒரு சூப்பர் ஆப்ஷனை கொடுக்குறாங்க. அதாவது உங்க போன்ல ஏதாச்சும் பிரச்சனைன்னா, நீங்க சர்வீஸ் சென்டருக்கு அலைய வேண்டியதில்லை, அவங்களே உங்க வீட்டுக்கு வந்து சரி பண்ணி தருவாங்க. இது தான் லாவாவோட மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். 7,500 ரூபாய்க்குள்ள ஒரு நீட்டான டிசைன், பெரிய பேட்டரி, அப்புறம் வீட்டுக்கே வந்து சர்வீஸ் பண்ற வசதினு ஒரு முழுமையான பேக்கேஜா இந்த Lava Yuva Star 3 இருக்கு. நீங்க இப்போவே ரீடைல் ஸ்டோர்கள்ல இந்த போனை வாங்கலாம். இந்த போனை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999