விவோ நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் Vivo X300 FE ஸ்மார்ட்போன், TUV மற்றும் சிங்கப்பூரின் IMDA தளங்களில் சான்றிதழ் பெற்றுள்ளது.
Photo Credit: Vivo
Vivo X300 FE, Vivo S50 Pro Mini-யின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (படம்)
விவோ (Vivo) ரசிகர்கள் எல்லாருக்கும் ஒரு செம்ம குட் நியூஸ் வந்துருக்கு. விவோ தன்னோட 'X' சீரிஸ்ல ஏற்கனவே X300 மற்றும் X300 Pro மாடல்களை லான்ச் பண்ணி கலக்கிட்டு இருக்காங்க. ஆனா, இப்போ அந்த சீரிஸ்ல ஒரு பட்ஜெட் பிரைஸ்ல, ஆனா பிளாக்ஷிப் வசதிகளோட ஒரு புது போன் வரப்போகுது. அதுதான் Vivo X300 FE. சமீபத்துல இந்த போன் (Model Number: V2537) TUV Rheinland அப்படிங்கிற முக்கியமான சர்டிபிகேஷன் தளத்துல சிக்கியிருக்கு. அதுல கிடைச்ச தகவல்படி, இந்த போன்ல 90W FlashCharge வசதி இருக்கப்போகுது. இதுமட்டும் இல்லாம சிங்கப்பூரோட IMDA தளத்துலயும் இந்த போன் லிஸ்ட் ஆகியிருக்கு. இதுல இருந்து ஒரு விஷயம் தெளிவா தெரியுது, இந்த போனோட குளோபல் லான்ச் ரொம்ப சீக்கிரமே நடக்கப்போகுது.
இப்போ வர்ற போன்கள் எல்லாம் ரொம்ப பெருசா இருக்குன்னு கவலைப்படுறவங்களுக்கு இந்த Vivo X300 FE ஒரு சரியான சாய்ஸா இருக்கும்.
டிஸ்ப்ளே: இதுல 6.31 இன்ச் 1.5K AMOLED பிளாட் டிஸ்ப்ளே இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. 120Hz ரிஃப்ரெஷ் ரேட் இருக்கறதுனால யூஸ் பண்றதுக்கு ரொம்ப ஸ்மூத்தா இருக்கும்.
பேட்டரி: சின்ன போனா இருந்தாலும், இதுல 6500mAh அளவுக்கு ஒரு பெரிய பேட்டரியை விவோ கொடுக்கப்போறதா செய்திகள் சொல்லுது. 90W வயர்டு சார்ஜிங் கூடவே 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இதுல இருக்கலாம்.
விவோ போன்னாலே கேமரா தான ஸ்பெஷல்?
● பின்பக்க கேமரா: 50MP மெயின் கேமரா (Sony IMX921), 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ்னு ஒரு சூப்பர் செட்டப் இதுல இருக்கு.
● செல்பி: முன்னாடி 50MP செல்பி கேமரா இருக்கப்போகுது, சோ வீடியோ கால் மற்றும் செல்பிக்களுக்கு பஞ்சம் இருக்காது.
● சிப்செட்: பெர்ஃபாமன்ஸை பொறுத்தவரை இதுல Snapdragon 8 Gen 5 சிப்செட் வர வாய்ப்பு அதிகமா இருக்கு. இது கேமிங் மற்றும் மல்டிடாஸ்கிங்கிற்கு வேற லெவல்ல சப்போர்ட் பண்ணும்.
விவோவோட முந்தைய மாடலான X200 FE இந்தியாவில நல்ல வரவேற்பை பெற்றுச்சு. அதேபோல இந்த X300 FE-யும் இந்தியாவோட BIS தளத்துல ஏற்கனவே சிக்கியிருக்கு. இதனால மார்ச் அல்லது ஏப்ரல் மாசத்துல இந்த போன் இந்திய சந்தைக்கு வரும்னு எதிர்பார்க்கலாம். இதோட விலை சுமார் ₹50,000-லிருந்து ₹55,000-க்குள்ள இருக்க வாய்ப்பிருக்கு.
நீங்க ஒரு காம்பாக்ட் சைஸ்ல, சூப்பர் கேமரா மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் இருக்குற போன் தேடிட்டு இருந்தா, கண்டிப்பா இந்த Vivo X300 FE-க்காக வெயிட் பண்ணலாம். இந்த போன் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? 90W சார்ஜிங் போதுமா இல்ல இன்னும் அதிகமா வேணுமா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Poco X8 5G and X8 Power 5G India Launch Date Set for September 4
Samsung Odyssey G Series Gaming Monitors Unveiled at Gamescom 2026 With Curved OLED, 1,100Hz Panel