டெல்லியில் நடைபெறவுள்ள AI Impact Summit 2026 மாநாட்டின் முழு அட்டவணை, முக்கிய விருந்தினர்கள் மற்றும் இலவசமாக பதிவு செய்யும் வழிமுறைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
Photo Credit: Digital India
பிப்ரவரி 19 அன்று குறிப்பிட்ட அமர்வுகளில் பிரதிநிதிகள் கலந்து கொள்ள முடியாது.
இன்னைக்கு நம்ம பார்க்கப்போற விஷயம் டெக்னாலஜி உலகத்துல ஒரு மிகப்பெரிய சம்பவம். ஆமாங்க, இந்தியாவோட முதல் பிரம்மாண்டமான சர்வதேச AI மாநாடு "AI Impact Summit 2026" புது டெல்லியில் தொடங்கப்போகுது. பிப்ரவரி 16-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 20-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு இந்த டெக் திருவிழா நடக்கப்போகுது. இந்த மாநாடு ஏன் இவ்வளவு ஸ்பெஷல் தெரியுமா? உலகமே வியந்து பார்க்குற AI நிறுவனங்களோட தலைவர்கள் இந்தியாவுக்கு வராங்க. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன், ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடி என ஒரு பட்டாளமே வராங்க. இதுமட்டும் இல்லாம, இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி, இன்போசிஸ் சலில் பரேக், டிசிஎஸ் கிருதிவாசன் என இந்திய கார்ப்பரேட் ஜாம்பவான்களும் இதில் கலந்துக்கிறாங்க. இது இந்தியாவோட AI எதிர்காலத்தை எப்படி மாத்தப்போகுதுன்னு விவாதிக்க ஒரு பெரிய பிளாட்பார்ம்.
● பிப்ரவரி 16 (திங்கள்): கொள்கை சார்ந்த விவாதங்கள் மற்றும் இந்தியா AI எக்ஸ்போ (India AI Expo) தொடக்கம்.
● பிப்ரவரி 17 (செவ்வாய்): மருத்துவம், கல்வி, விவசாயம் போன்ற துறைகளில் AI எப்படி பயன்படும் என்பது பற்றிய ஆய்வறிக்கைகள் வெளியீடு.
● பிப்ரவரி 18 (புதன்): புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான பிரத்யேக அமர்வுகள்.
● பிப்ரவரி 19 (வியாழன்): இதுதான் ரொம்ப முக்கியமான நாள்! பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார். அன்னைக்கு தான் உலகளாவிய சிஇஓ-க்களின் வட்டமேஜை மாநாடு நடக்கும்.
● பிப்ரவரி 20 (வெள்ளி): GPAI உறுப்பு நாடுகளின் கூட்டங்கள் மற்றும் பொறுப்பான AI பயன்பாடு குறித்த விவாதங்கள்.
இந்த மாநாட்டை நீங்க நேர்ல போய் பார்க்கணுமா? அதுக்கு ஒரு சூப்பர் வழி இருக்கு. பொதுமக்கள் 'டெலிகேட்ஸ்' (Delegates) ஆக இதில் பங்கேற்கலாம். முக்கியமா, இதற்கு பதிவு கட்டணம் எதுவும் கிடையாது, முற்றிலும் இலவசம்!
பிப்ரவரி 19-ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் கலந்துகொள்ளும் சில முக்கிய அமர்வுகளுக்கு மட்டும் டெலிகேட்களுக்கு அனுமதி இருக்காது. பாதுகாப்பு காரணங்களால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மற்றபடி எக்ஸ்போ மற்றும் விவாதங்களில் நீங்கள் தாராளமாக பங்கேற்கலாம். இந்தியாவில் AI புரட்சி என்பது வெறும் பேச்சோடு நிக்காம, இந்த மாநாடு மூலமா ஒரு பெரிய உருவம் எடுக்கப்போகுது. நீங்க ஒரு மாணவரா இருந்தாலும் சரி, ஐடி ஊழியரா இருந்தாலும் சரி, இல்ல டெக்னாலஜி மேல ஆர்வம் உள்ளவரா இருந்தாலும் சரி, இந்த வாய்ப்பை தவறவிடாதீங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Razer Hammerhead V3 Chroma Wired Earphones Launched With ANC, IPX4 Rating: Price, Features
Name of Motorola's Upcoming Wide Foldable Phone Revealed in New Leak