சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய 45W மினி GaN சார்ஜரை அறிமுகப்படுத்தியுள்ளது.
Photo Credit: Xiaomi
Xiaomi 45W Mini-GaN சார்ஜர் இந்தியா அறிமுகம்; GaN, PD 3.0 ஆதரவு, கேபிள், விலை விவரங்கள்
நம்ம ஊர்ல இப்போ ஸ்மார்ட்போன் வாங்குறப்போ சார்ஜர் குடுக்குறதையே நிறைய பிராண்ட் நிறுத்திட்டாங்க. அதனால நாம தனியா சார்ஜர் வாங்க வேண்டிய சூழல் இருக்கு. அப்படி ஒரு சார்ஜர் வாங்கும்போது அது 'குட்டியா' இருக்கணும், அதே சமயம் 'பவர்ஃபுல்லா' இருக்கணும்னு தான் எல்லாரும் நினைப்போம். அந்த ஆசையை நிறைவேத்த இப்போ Xiaomi ஒரு மாஸ் புராடக்ட்டை இறக்கிருக்காங்க. அதுதான் Xiaomi 45W Mini-GaN Charger. சாதாரண சார்ஜர்கள்ல 'சிலிக்கான்' (Silicon) பயன்படுத்துவாங்க. ஆனா இந்த சார்ஜர்ல GaN (Gallium Nitride) அப்படின்ற புது டெக்னாலஜியை சியோமி யூஸ் பண்ணிருக்காங்க. இதோட பெரிய பிளஸ் என்னன்னா, இது சாதாரண சார்ஜரை விட ரொம்ப சின்னதா இருக்கும். ஆனா அது கொடுக்குற பவர் மட்டும் சும்மா அதிரடியா இருக்கும். முக்கியமா இது சார்ஜ் ஏறும்போது ரொம்ப ஹீட் ஆகாது.
இந்த சார்ஜரோட ஹைலைட்டே இதோட 'மல்டி-புரோட்டோகால்' (Multi-protocol) சப்போர்ட் தான். இதுல PD 3.0 (Power Delivery), QC 3.0 (Quick Charge), மற்றும் PPS வசதிகள் இருக்கு.
● ஐபோன் யூசர்களுக்கு: ஆப்பிள் நிறுவனம் இப்போ லேட்டஸ்டா கொண்டு வந்திருக்கு ஐபோன் 17 சீரிஸ் வரைக்கும் இதுல ஃபுல் ஸ்பீடுல சார்ஜ் பண்ணலாம்.
● சாம்சங் யூசர்களுக்கு: சாம்சங் S24 அல்ட்ரா போன்ற போன்கள்ல இருக்குற 'சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்' (Super Fast Charging) வசதியை இது சப்போர்ட் பண்ணும்.
● லேப்டாப் & டேப்லெட்: உங்ககிட்ட மேக்புக் ஏர் (MacBook Air) இல்லனா ஐபேட் (iPad) இருந்தா கூட இந்த ஒரு குட்டி சார்ஜர் போதும்.
இந்த சார்ஜர் பாக்குறதுக்கு ஒரு குட்டி பாக்ஸ் மாதிரி ரொம்ப கியூட்டா இருக்கு. இதோட எடையும் ரொம்ப கம்மிதான், சோ நீங்க டிராவல் பண்ணும்போது பாக்கெட்ல கூட போட்டுட்டு போயிடலாம். இதுல ஒரே ஒரு USB Type-C போர்ட் தான் இருக்கு. வெள்ளை கலர்ல ரொம்ப கிளாஸான பினிஷ்ல இது வருது. நிறைய கம்பெனிகள் சார்ஜர் மட்டும் தான் குடுப்பாங்க, கேபிளுக்கு நாம தனியா ₹500 செலவு பண்ணனும். ஆனா சியோமி இதுல ஒரு நல்ல காரியம் பண்ணிருக்காங்க. இந்த சார்ஜர் கூடவே ஒரு தரமான Type-C to Type-C கேபிள்-யும் உள்ளயே குடுத்துட்டாங்க. சோ, நீங்க பாக்ஸை திறந்த உடனே சார்ஜ் போட ஆரம்பிச்சிடலாம். சார்ஜர் சின்னதா இருக்குறதுனால ஷார்ட் சர்க்யூட் ஆகிடுமோனு பயப்பட தேவையில்லை. இதுல ஓவர்-வோல்டேஜ் பாதுகாப்பு, அதிக வெப்பமடைவதை தடுக்கும் தொழில்நுட்பம்னு பல அடுக்கு பாதுகாப்பு வசதிகளை சியோமி சேர்த்திருக்காங்க.
இந்த Xiaomi 45W Mini-GaN சார்ஜரோட லான்ச் விலை ₹1,799-னு பிக்ஸ் பண்ணிருக்காங்க. இதோட உண்மையான விலை ₹2,999-னு சொல்லப்பட்டாலும், இப்போதைக்கு ஆஃபர்ல கம்மி விலையில கிடைக்குது. நீங்க mi.com அல்லது பக்கத்துல இருக்குற மி ஹோம் (Mi Home) ஸ்டோர்கள்ல இதை வாங்கிக்கலாம். ஆங்கர் (Anker) அல்லது பெல்கின் (Belkin) போன்ற பிராண்டுகள்ல இதே மாதிரி GaN சார்ஜர் வாங்கணும்னா ₹3,000-க்கு மேல செலவாகும். ஆனா சியோமி அதே குவாலிட்டியை பாதி விலையில குடுக்குறது செம்ம டீல் தான். நீங்க ஒரு பவர்ஃபுல் மற்றும் போர்ட்டபிள் சார்ஜர் தேடிட்டு இருந்தீங்கன்னா, கண்டிப்பா இதை ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. இந்த சார்ஜரை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? ₹1,800-க்கு இது வர்த்தா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Razer Hammerhead V3 Chroma Wired Earphones Launched With ANC, IPX4 Rating: Price, Features
Name of Motorola's Upcoming Wide Foldable Phone Revealed in New Leak