OnePlus Nord 4 மற்றும் OnePlus Nord CE 4 Lite 5G ஆகிய மாடல்களில் புதிய AI Features அறிமுகமாகி உள்ளது. இந்த புதிய செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் ஆகஸ்ட் 10ல் அப்டேட் செய்யப்பட்டது.
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் மென்பொருட்கள் மாதாந்திர அளவில் புதுப்பிக்கும் முறை ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கியது. இந்த புதுப்பிப்பு இந்தியா உட்பட மத்திய கிழக்கு மற்றும் ஆசியா-பசிபிக் பிராந்தியங்களில் படிப்படியாக தொடங்கியுள்ளது.
OnePlus Nord 4 இந்தியாவில் ரூ.29,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய தலைமுறை Nord சீரிஸ் ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக பல அம்சங்களை வைத்திருக்கிறது. பல மாதங்களுக்கு பிறகு மிலன் நகரில் நடந்த "சம்மர் வெளியீட்டு நிகழ்வில்" OnePlus Nord 4 அறிவிக்கப்பட்டது. இதே விழாவில் OnePlus Watch 2R, Nord Buds 3 Pro மற்றும் Pad 2 போன்ற பல சாதனங்களும் வெளியிடப்பட்டது.
OnePlus Nord 4 ஸ்மார்ட்போனின் கேமரா பகுதியை தவிர மற்ற இடங்களில் மெட்டல் பிரேம் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம் OnePlus நிறுவனம் 2017க்கு பிறகு மீண்டும் மெட்டல் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.