OnePlus நிறுவனம் ஜூலை 16 ஆம் தேதி இத்தாலியில் நடத்தும் நிகழ்ச்சியில் தனது புதிய Nord சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Photo Credit: Android Headlines
ஒன்பிளஸ் நிறுவனமானது ஜூலை 16 ஆம் தேதியன்று புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது. MediaTek Dimensity 9000 SoC மூலம் இயங்கும் OnePlus Nord 3 கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வரிசையில் OnePlus இப்போது OnePlus Nord 4 வெளியிடதயாராகி வருகிறது. OnePlus Nord 4 செல்போன் Snapdragon 7+ Gen 3 SoC மூலம் இயங்கப்படும். 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,500mAh பேட்டரியை கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் செல்பி கேமராக்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
6.74 இன்ச் 1.5K 2.8D கர்வ்டு AMOLED 120Hz ஸ்கிரீன், அலர்ட் ஸ்லைடர் வசதி இருக்கிறது. இது 2150nits என்ற அளவில் அதிகபட்ச பிரைட்னஸயும் வழங்கும். ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ் 14 சாப்ட்வேர் ஸ்கீனைப் பெறும் என்று கூறப்படுகிறது. இந்த போன் 3 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், 4 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறும். இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் இரட்டை ஸ்பீக்கர்கள் இடம்பெறலாம். Wi-Fi 6, Bluetooth 5.4, NFC, IR blaster, x-axis linear motor, அலர்ட் slider உட்பட இன்னும் பல அம்சங்கள் இருக்கலாம் என தெரிகிறது.
விலையை பொறுத்தவரையில் OnePlus Nord 4 மறுபெயரிடப்பட்ட OnePlus Ace 3V ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மார்ச் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது . 12GB RAM + 256GB தோராயமாக ரூ. 23,000 என்ற விலை இருக்கலாம் என கூறப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999