ஒன்பிளஸ் நிறுவனம், 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 12 ஜிபி ரேமுடன் கூடிய அட்டகாசமான ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. இதிலுள்ள சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப வசதிகள் குறித்த விவரங்களை இங்குப் பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் வரும் 21 ஆம் தேதி அறிமுகமாகிறது. இது அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே பல்வேறு சிறப்பம்சங்கள், விலை மதிப்பீடுகள் ஆன்லைனில் கசிந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்டில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஃபோரம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒன்பிள்ஸ் நார்டு ஸ்மார்ட்போனில் சோனி IMX586 சென்சார், f/1.75 அபாச்சருடன் கூடிய 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. OIS எனப்படும் ஆப்டிக்கல் இமெஜ் ஸ்டெபிலிஷேன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்தவிதமான அதிர்வுகளும் இல்லாமல், மிகத்துல்லியமாக போட்டோ எடுக்க முடியும்.
இந்தப் பிரைமரி கேமராவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 5 மெகா பிக்சல் டெப்த் கேமரா, மக்ரோ சென்சார் ஆகியவை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. ஆக மொததம் நான்கு விதமான பிரைமரி கேமராக்கள் உள்ளன. இதுதவிர, 105 டிகிரி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் செல்ஃபி கேமரா, 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் செல்ஃபி கேமராவிலேயே 105 டிகிரி கோணத்தில் போட்டோக்கள், வீடியோக்களை அட்டகாசமாக எடுக்க முடியும்
மேலும், குவால்காம் ஸ்னாப்டிராகன் 765G SoC பிராசசர், அமோலெட் டிஸ்பிளே, 4,115 mAh பேட்டரி சக்தி, 30W வார்ப் சார்ஜர் ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளன. முன்னதாக 7 மணி நேரம் சார்ஜ் நிற்கக்கூடிய ஒன்பிளஸ் பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஒன்பிளஸ் நார்டு போனில் 10 நிமிட சார்ஜில், 10 மணி நேரம் சார்ஜ் நிற்கும் இயர் பட்ஸ் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 21 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் விலை 30 ஆயிரம் ரூபாய் வரையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்