OnePlus Nord 4 மற்றும் OnePlus Nord CE 4 Lite 5G ஆகிய மாடல்களில் புதிய AI Features அறிமுகமாகி உள்ளது.
Photo Credit: Gadgets 360
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது OnePlus Nord 4 மற்றும் OnePlus Nord CE 4 Lite 5G செல்போன் மாடலில் உள்ள AI Features பற்றி தான்.
OnePlus Nord 4 மற்றும் OnePlus Nord CE 4 Lite 5G ஆகிய மாடல்களில் புதிய AI Features அறிமுகமாகி உள்ளது. இந்த புதிய செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் ஆகஸ்ட் 10ல் அப்டேட் செய்யப்பட்டது. இந்த AI தொகுப்பு வழியாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்களுக்கு நிறுவனம் மூன்று புதிய AI அம்சங்களை அறிவித்தது. இந்த அம்சங்கள் Oneplus செல்போனின் பக்கவாட்டில் தோன்றும். ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே அம்சங்கள் தோன்றும். உதாரணமாக, AI Speak அம்சம் ஒரு பெரிய அளவிலான உரையுடன், இன்டர்நெட் வசதி ஆன் செய்யப்பட்டு இருந்தால் மட்டுமே தோன்றும்.
இந்த AI அம்சங்கள் ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Nord 4 மாடலில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் AI அம்சங்களை மேம்படுத்த தாமதமாகிவிட்டது. மேலும் OnePlus நிறுவனம் இறுதியாக அவற்றை சேர்த்து கூடுதலாக OnePlus Nord CE4 Lite 5G மாடல் செல்போன்களிலும் இந்த அம்சங்களை கொண்டு வந்துள்ளது. இது இந்திய பயனாளர்களுக்கு மட்டுமே பெருந்தும்.
Nord CE 4 Lite இந்திய பயனர்கள் மட்டுமே AI அம்சத்தை அணுக முடியும், மேலும் ஐரோப்பா, இந்தியா, ஆசியா-பசிபிக், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, தெற்காசியா, ரஷ்யா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள Nord 4 பயனர்கள் பயன்படுத்த முடியும் என OnePlus நிறுவனம் கூறியது.
மூன்று AI அம்சங்களில் முதலாவது AI ஸ்பீக் ஆகும். இது டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் (TTS) அம்சமாகும். இதன் மூலம் எந்தப் பக்கத்தையும் உரக்கப் படிக்க முடியும். இது பிரவுசர்கள் மற்றும் அதிக உரை அளவு கொண்ட சில ஆப்களில் வேலை செய்கிறது. ஆனால் சில சமூக ஊடக பயன்பாடுகளில் இது வேலை செய்யாது. பயனர்கள் ஆண் மற்றும் பெண் குரல்களை தேர்வு செய்யலாம். ஒரு பகுதியை மீண்டும் இயக்கலாம், வாக்கியங்களைத் தவிர்க்கலாம் மற்றும் திரையில் தோன்றும் ஆப்ஷன் வழியாக பின்னணி வேகத்தை சரிசெய்யலாம். படிக்கக்கூடிய உரையும் தனித்தனியாக தோன்றும்.
இரண்டாவது அம்சம் AI சுருக்கம். கூகுள் மற்றும் சாம்சங்கில் நாம் பார்த்தது போல, சுருக்க அம்சம் அடிப்படையில் ஒரு பெரிய ஆவணம் அல்லது வலைப்பக்கத்தின் உரை சுருக்கத்தை உருவாக்குகிறது. ஒன்பிளஸ் பயனர்களை நோட்ஸ் பயன்பாட்டில் நகலெடுக்க, பகிர அல்லது உருவாக்கப்பட்ட சுருக்கத்தை சேமிக்க இது அனுமதிக்கிறது. அதை File Dock வசதி மூலம் சேமித்து வைக்கலாம்.
இறுதியாக வருவது AI ரைட்டர் அம்சம் ஆகும். கட்டுரைகள், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், மதிப்புரைகள் மற்றும் கதைகளை எழுதக்கூடிய AI கருவி இது. இந்த அம்சம் உரை புலத்தில் செயல்படுத்தப்படும். உருவாக்கப்பட்ட உரையின் தொனியைக் கட்டுப்படுத்த ஒரு ஆப்ஷன் உள்ளது. மேலும், பயனர்கள் திரையில் உள்ள படங்களின் அடிப்படையில் உரையை உருவாக்க முடியும்.
இந்த அம்சங்களைப் பயன்படுத்த OnePlus பயனர்கள் முதலில் திரை அங்கீகாரத்தை இயக்க வேண்டும். Settings > Accessibility & Convenience என்பதற்குச் சென்று இதைச் செய்யலாம் . மாற்றாக, முதல் முறையாக அம்சத்தைப் பயன்படுத்தும் போது, திரை அறிதலை இயக்க ஒப்புதல் கேட்கும் ஒரு ப்ராம்ட் காண்பிக்கும். அதனை ஓகே கொடுத்தால் இந்த ஆப்ஷன் உள்ளே போகலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Vivo Y31d Launched With Snapdragon 6s 4G Gen 2 Chipset and 7,200mAh Battery
Samsung Galaxy S26 Ultra Tipped to Cost Less Than Predecessor; Galaxy S26, Galaxy S26+ Price Hike Unlikely