OnePlus Nord 4 இந்தியாவில் ரூ.29,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய தலைமுறை Nord சீரிஸ் ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக என்னென்ன அம்சங்களை வைத்திருக்கிறது என பார்ப்போம்.
Photo Credit: Gadgets 360
OnePlus Nord 4 இந்தியாவில் ரூ.29,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய தலைமுறை Nord சீரிஸ் ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக பல அம்சங்களை வைத்திருக்கிறது. பல மாதங்களுக்கு பிறகு மிலன் நகரில் நடந்த "சம்மர் வெளியீட்டு நிகழ்வில்" OnePlus Nord 4 அறிவிக்கப்பட்டது. இதே விழாவில் OnePlus Watch 2R, Nord Buds 3 Pro மற்றும் Pad 2 போன்ற பல சாதனங்களும் வெளியிடப்பட்டது.
சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது OnePlus நிறுவனம். இப்போது இந்தியாவில் OnePlus Nord 4 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் Nord சீரிஸில் வெளிவந்துள்ளது. 4 ஆண்டுகளுக்கான OS அப்டேட், 6 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்ஸ் போன்ற உத்தரவாதம் ப்ரீமியம் செக்மென்ட் போனில் கிடைக்கிறது. AI க்ளியர் ஃபேஸ், AI எரேசர், AI சம்மரைஸ் மாதிரியான அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது.
6.74 இன்ச் AMOLED டிஸ்பிளே இதில் இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரேஷன் 3 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை கொண்டுள்ளது. பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது. 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா உள்ளது. 5,500mAh பேட்டரி 100W SuperVOOC திறன் கொண்ட சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யப்படுகிறது. 8ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இரண்டு மாடல்களில் வந்துள்ளது.
5ஜி நெட்வொர்க்சப்போர்ட் செய்யும். இந்த போனின் தொடக்க விலை ரூ.29,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேமரா அமைப்பு 4K வீடியோவை வினாடிக்கு 30/60 பிரேம்கள் (fps) மற்றும் 1080p வீடியோவை 60fps இல் படமாக்கும் திறன் கொண்டது. இது 256ஜிபி வரை UFS 4.0 சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. 5G, 4G LTE, Wi-Fi 6, ப்ளூடூத் 5.4, GPS, GLONASS, BDS, Galileo, NFC, QZSS மற்றும் USB Type-C போர்ட் வசதிகள் இருக்கிறது. ஃபேஸ் அன்லாக் அம்சம், இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளது. இதில் உள்ள வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் 28 நிமிடங்களில் 1 முதல் 100 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்யும். OnePlus Nord 4 செல்போனை ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர், அமேசான் இந்தியா மற்றும் பிற ரீடெய்ல் ஸ்டோர்கள் மூலம் ஆர்டர் செய்யலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999