அடிமாட்டு விலைக்கு தயாரிப்புகளை அள்ளி தரும் OnePlus Community Sale

அடிமாட்டு விலைக்கு தயாரிப்புகளை அள்ளி தரும் OnePlus Community Sale

Photo Credit: One Plus

OnePlus 12R விலை ரூ. விற்பனையின் போது 35,999

ஹைலைட்ஸ்
  • OnePlus Nord 4 தயாரிப்புகள் சலுகை விலையில் கிடைக்கிறது
  • OnePlus 12 இந்தியாவில் ரூ. 64,999 விலையில் ஆரம்பம்
  • டிசம்பர் 6-ம் தேதி முதல் விற்பனை தொடங்கும்
விளம்பரம்

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது OnePlus Community Sale விற்பனை பற்றி தான்.

OnePlus நிறுவனம் இந்தியாவில் அதன் OnePlus Community Sale விற்பனையை ஆரம்பித்துள்ளது. விற்பனை டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறும். OnePlus வழங்கும் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள், டேப்லெட்டுகள் சலுகை விலையில் கிடைக்கும். பொதுவான தள்ளுபடிகள் தவிர, விற்பனையின் போது வாடிக்கையாளர்கள் ICICI வங்கி, OneCard மற்றும் RBL வங்கி கிரெடிட் கார்டுகளில் வங்கி அடிப்படையிலான கட்டணச் சலுகைகளையும் பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளில் 12 மாதங்கள் வரை நோ காஸ்ட் EMI விருப்பங்களையும் பெறலாம்.

OnePlus Community Sale எதுக்கெல்லாம் சலுகை?

OnePlus 12 இந்தியாவில் ரூ.64,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கூறிய இது சலுகை விலையில் ரூ.ரூ. 59,999க்கு கிடைக்கிறது. வரவிருக்கும் விற்பனையில் 6,000 தள்ளுபடி வருகிறது. ஐசிஐசிஐ வங்கி, ஒன்கார்டு மற்றும் ஆர்பிஎல் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ. 7,000 தள்ளுபடியும் உண்டு.

OnePlus 12R செல்போன் விலையும் ரூ. 6,000 தள்ளுபடி ஆகிறது. விற்பனையின் போது 3,000 வங்கி தள்ளுபடியும் கிடைக்கும். இந்த சலுகையுடன் சேர்த்து OnePlus 12R ரூ. 35,999 விலைக்கு கிடைக்கும். OnePlus Nord 4 மாடலில் தேர்ந்தெடுக்கப்பட்ட செல்போன்களுக்கு 3000 வரை தள்ளுபடி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் உடனடி வங்கி தள்ளுபடியாக ரூ. 2,000 பெறலாம்.
OnePlus Community Sale விற்பனையின் போது OnePlus Nord CE 4 வாங்குபவர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி சலுகையாக கூடுதல் 1000 ரூபாய் தள்ளுபடி பெறலாம். ரூ. 24,999 மதிப்புடைய செல்போன் ரூ. 22,999 விலையில் வாங்கலாம். எக்ஸ்சேஞ்ச் வசதி மூலம் OnePlus Nord Buds 2R பெறலாம்.

OnePlus Open ஆனது ரூ. 1,49,999 பதிலாக ரூ. 1,34,999 மற்றும் OnePlus Pad Go ரூ. 37,999, பதிலாக ரூ. 27,999 விலையில் கிடைக்கும். விற்பனையின் போது. OnePlus Pad 2 மற்றும் OnePlus Nord CE 4 Lite ஆகியவை ரூ. 2,000 தள்ளுபடி விலையில் விற்கப்படும். OnePlus Nord CE 4 Lite வாங்குபவர்கள் ரூ. 1,000 உடனடி வங்கி தள்ளுபடி மற்றும் வாங்கும் போது ஒரு ஜோடி OnePlus Bullets Wireless Z2 இலவசமாக பெறலாம்.
OnePlus Watch 2 மற்றும் OnePlus Watch 2R வாங்கும் போது ரூ.3000 தள்ளுபடி கிடைக்கும். ரூ. 24,999 விற்பனை விலை என்கிற நிலையில் ரூ.20,999 க்கு கிடைக்கிறது. OnePlus Buds Pro 3 மாடலும் ரூ. 11,999 என்கிற விலையில் இருந்து ரூ. 7,999 விலைக்கு கிடைக்கிறது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus, OnePlus Community Sale, OnePlus 12R, OnePlus 12
Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »