ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் வேரியண்டுகள் அதன் சிறப்பம்சத்துக்கு ஏற்றவாறு ரூ.24,999 முதல் ரூ.29,999 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் மூன்று வித வேரியண்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பட்ஜெட் விலையில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்பதன் அடிப்படையில், வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை, சிறப்பம்சங்கள், விற்பனைக்கு வரும் தேதி குறித்த முழு விவரங்களை இங்குப் பார்க்கலாம்.
இந்தியாவில் தரம் வாய்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக ஒன்பிளஸ் திகழ்கிறது. இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வந்தன. உடனே அந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் Z, ஒன்பிளஸ் 8 லைட் என பல வதந்திகள் கிளம்பின. இறுதியாக பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனின் பெயர் ஒன்பிளஸ் நார்டு (OnePlus Nord) என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இது பட்ஜெட் விலை என்று முதலில் தகவல்கள் வந்தாலும், பட்ஜெட்டை விடசிறிது அதிக விலைதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விலை நிர்ணயம்:
ஒன்பிளஸ் நார்டு 6ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 24,999.
ஒன்பிளஸ் நார்டு 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 27,999.
ஒன்பிளஸ் நார்டு 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 29,999.
பட்ஜெட் விலையை விட சற்று அதிகமாக இருந்தாலும், ஒன்பிளஸ் தரப்பில் மிகக்குறைந்த விலையில் அறிமுகமாகும் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இதுவே ஆகும். மொத்தம் மூன்று வித நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. 5ஜி நெட்வொர்க் தொழில்நுட்பம், இந்தியாவின் நேவிக் சிஸ்டம் ஆகியவை உள்ளன.
![]()
ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனில் குவாட் கேமரா ( 4 கேமரா) வழங்கப்பட்டுள்ளது.
எப்போது விற்பனைக்கு வரும்?
ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் மூன்று வித வேரியண்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 8ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள் மட்டுமே ஆகஸ்ட் 4 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதற்கான முன்பதிவு இன்று (ஜூலை 22) முதல் தொடங்குகிறது. ரூ.24,999 மதிப்பிலான 6ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள்:
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10 ஆக்ஸிஜன் ஓஎஸ் 10.5
திரை அளவு: 6.44 இன்ச்
திரை: அமோலேட், 90Hz ரெவ்ரேஷ் ரேட்
பாதுகாப்பு: கொரிலா கிளாஸ் 5
கூடுதல் சிறப்பம்சங்கள்: நைட் மோட், ரீடிங் மோட், வீடியோ என்ஹன்சர்
பிராசசர்: குவால்காம் ஸ்நாப்டிராகன் 765G Soc
கேமரா சிறப்பம்சங்கள்:
கேமராவைப் பொறுத்தவரையில் பிரைமரி கேமரா, செல்ஃபி கேமரா இரண்டிலும் 4K வீடியோ எடுக்க முடியும். முன்புறத்தில் டூயல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
Is OnePlus 8 Pro the perfect premium phone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nikon Z5IIC Full-Frame Mirrorless Camera Launched in India With 4K Video Recording: Price, Specifications