முக்கிய அம்சங்களுடன் வெளியாகும் ரெட்மி நோட் 7, ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 23 பிப்ரவரி 2019 14:21 IST
ஹைலைட்ஸ்
  • ரெட்மி நோட் 7 போனுக்காக மைக்ரோ தளத்தை பிளிப்கார்ட் துவங்கியது!
  • போனின் சிறப்புகளை ஹைலையிட் செய்யும் மைக்ரோ சையிட்
  • ரெட்மி நோட் 7 சீனாவில் கடந்த மாதம் அறிமுகம்!

இந்தியாவில் ஃபிளிப்கார்ட் மட்டும் எம்ஐ.காமில் மட்டுமே இந்த போன் அறிமுகமாகிறது.

ரெட்மி நோட் 7 ஃபிளிப்கார்டில் அறிமுகமாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அந்நிறுவனம் தொடர்ந்து இந்த போனைப் பற்றிய விளம்பரத்தை வெளியிட்டு வருகிறது.

அடுத்த வாரம் வெளியாகும் சாம்சங் எம்30 ஸ்மார்ட்போனுடன் மோதவிருக்கும் இந்த ரெட்மி நோட்7 போனுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சமாக 48 மெகா பக்சல் கொண்ட முதற்கட்ட கேமரா சென்சார் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சியோமி- ரெட்மியின் இந்த தயாரிப்பு வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி சரியாக மதியம் 12 மணிக்கு வெளியாகின்ற நிலையில் இந்த போனின் விலை பற்றிய தகவல்கள் இன்னும் அறியப்படவில்லை.

தற்போது வெளியாகியுள்ள டீசரில், ரெட்மி நோட் 7 போனின் கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் பளபளக்கும் கண்ணாடி டிசைன்கள், நெடுநேரம் தாக்குப்பிடிக்கும் பேட்டரி கட்டமைப்பு மற்றும் ஸ்பிளாஷ் ப்ரோடெக்ஷன் (splash protection) ஆகியவற்றுக்கும் இந்த புதிய மாடலில முக்கியதுவம் இருப்பது தெரிகிறது. 

இப்படி பல அம்சங்கள் நிறைந்த இந்தப் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவைப் பொறுத்தவரை ஃபிளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காமில் மட்டுமே வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.

 

 

இந்தியாவில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட் போனின் விலைப் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், சீனாவில் வெளியான விலையைப் போலவே இங்கும் மதிப்பிடப்படும் என எதிர்பார்கப்படுகிறது.

Advertisement

3ஜிபி ரேம்/ 32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூபாய் 10,500க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது. 4ஜிபி ரேம்/64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூபாய் 12,600க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது. இந்த போனின் அதிகப்படியான விலை 6ஜிபி ரேம்/ 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடலுக்கு இருக்கும். அது 14,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம்.

சீனாவில் ட்வைலைட் கோல்டு, ஃபான்டசி ப்ளூ மற்றும் பிரைட் பிளாக் போன்ற நிறங்களில் கடந்த மாதம் இந்த போன் வெளியானது. இந்தியாவில் இந்த போன் சிவப்பு, கறுப்பு மற்றும் நில நிறங்களில் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

இந்த ரெட்மி நோட் 7 போன், இரண்டு சிம் கார்டு வசதியைக் கொண்டுள்ளது. 6.3 இஞ்ச் ஹெச்டி திரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 6 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதியையும் அடக்கியுள்ளது. ஏற்கெனவே வெளியான ரெட்மி நோட் வரிசை போன்களை விட இந்த போனில் சிறப்பாக ஸ்னிப் டிராகன் 660 SoC பிரசாஸ்சர் பொறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

பொதுவாக பட்ஜெட் போன்களில் சி டைப் சார்ஜிங் ஸ்லாட் இடம் பெறாத நிலையில், தற்போது ரெட்மி நோட் 7 போனில் இந்த புதிய அம்சம் இடம் பெற்றுள்ளது.

பின்புறம் அமைந்திருக்கும் இரண்டு பின்புற கேமராக்களில் இருக்கும் 48 மெகா பிக்சல் ப்ரைமரி கேமரா, சாம்சங் ஜிஎம் 1 சென்சாரால் இயங்குகிறது. இரண்டாம் நிலையில் 5 மெகா பிக்சல் சென்சாரும், செல்ஃபிகளுக்காக 13 மெகா பிக்சல் கேமராவும் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் சுமார் 4000 mAh பேட்டரி வசதியை ரெட்மி நோட் 7 பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு. போன் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கூடுதல் தகவல்களுக்காக காத்திருக்கவும். 

 

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Smooth app and UI performance
  • Good battery life
  • Bright and sharp display
  • Shoots decent images in good light
  • Bad
  • Hybrid dual-SIM slot
  • Fast charger not bundled
  • Preinstalled bloatware
  • Average low-light camera quality
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 13-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung ரசிகர்களே, ஜாக்கிரதை! 6 வருஷத்துக்கு அப்புறம் வயர்லெஸ் சார்ஜிங் ஸ்பீட் மாறுது
  2. Star Wars ஃபேன்ஸ்-க்கு Oppo-வோட சர்ப்ரைஸ்! Reno 14F Limited Edition பத்தி தெரிஞ்சுக்கோங்க
  3. உங்க Oppo OnePlus போன்ல Android 16 அப்டேட் வந்துருச்சா? AI Features & புது டிசைன் மிரட்டல்
  4. பட்ஜெட்-ல Nothing டிசைன்! Phone 3a Lite லான்ச்! Glyph Light-உடன் மிரட்டலான அம்சங்கள்
  5. உங்க Pixel போன் இன்னும் ஸ்மார்ட் ஆகிடுச்சு! Messages-ல போட்டோவை Remix பண்ணலாமா? மிஸ் பண்ணாதீங்க
  6. Samsung Galaxy போன்ல புது Spyware தாக்குதல்! WhatsApp மூலமா வந்த ஆபத்து நீங்க செக் பண்ணீங்களா?
  7. Vivo-ன் அடுத்த பவர்ஃபுல் மாடல்! 7000mAh பேட்டரி 1.5K AMOLED Display! விலை என்ன தெரியுமா?
  8. Apple மாதிரி Action Key-ஆ? Lava Agni 4-ன் மிரட்டல் லீக்ஸ்! ₹30,000-க்கு கம்மி விலையில் இந்தியன் கிங்
  9. Airtel-ல ரீசார்ஜ் விலை ஏறுது! வெறும் வாய்ஸ் மட்டும் வேணுமா? இனி எவ்வளவு செலவாகும்னு தெரிஞ்சுக்கோங்க!
  10. Samsung Galaxy S26, S26+ : Raised Camera Island உடன் வடிவமைப்பு மாற்றம் லீக்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.