இந்த புதிய வகை 'ரெட்மீ நோட் 7 Pro' ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை நாளை மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது.
சியோமி நிறுவனம், இந்த புதிய வகை குறித்த அறிவிப்பை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது
ஓரு புதிய வகை 'ரெட்மீ நோட் 7 Pro'-வை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக சியோமி நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அறிவித்திருந்தது. அதன்படி 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ நோட் 7 Pro' ஸ்மார்ட்போனை அறிகப்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு, 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு என இரண்டு வகைகளில் அறிமுகமாகி, விற்பனையானது. முன்னதாக, இந்த இரண்டு வகை ஸ்மார்ட்போன்களும் ஜூன் 30 வரை முழு நேர விற்பனையிலிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மீ 'நோட் 7 Pro': விலை!
தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ நோட் 7 Pro' ஸ்மார்ட்போனின் விலை 15,999 ரூபாய் என சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi தளங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை நாளை மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது.
முன்னதாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு, 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு என்று இரண்டு வகைகளில் இந்த ரெட்மீ 'நோட் 7 Pro' அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வந்தது. அவற்றில் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு ரெட்மீ 'நோட் 7 Pro'-வின் விலை 13,999 ரூபாய். 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு ரெட்மீ 'நோட் 7 Pro'-வின் விலை 16,999 ரூபாய். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும், நீலம் (Neptune Blue), சிவப்பு (Nebula Red), மற்றும் கருப்பு (Space Black) என்ற மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு வந்தது.
ரெட்மீ 'நோட் 7 Pro': சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதிகளை கொண்ட இந்த ரெட்மீ 'நோட் 7 Pro' ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் அளவிலான FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், வாட்டர் ட்ராப் நாட்ச் திரை கொண்டுள்ளது. மேலும், இதில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் அளவிலான கேமரா என இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. முன்புறத்தில், 13 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
4000mAh பேட்டரி அளவை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், குவால்காம் அதிவேக சார்ஜ் 4.0 வசதியையும் கொண்டுள்ளது. டைப்-C சார்ஜர் போர்ட், 3.5mm ஹெட்போன் ஜேக்-உடன் 4G வசதி, வை-பை மற்றும் ப்ளூடூத் v5.0 ஆகிய வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo Find X10 Pro Max India Launch Teased; Confirmed to Feature MediaTek Dimensity 9600 Pro SoC