இந்தியாவில் ஃபிளிப்கார்ட் மட்டும் எம்ஐ.காமில் மட்டுமே இந்த போன் அறிமுகமாகிறது.
ரெட்மி நோட் 7 ஃபிளிப்கார்டில் அறிமுகமாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அந்நிறுவனம் தொடர்ந்து இந்த போனைப் பற்றிய விளம்பரத்தை வெளியிட்டு வருகிறது.
அடுத்த வாரம் வெளியாகும் சாம்சங் எம்30 ஸ்மார்ட்போனுடன் மோதவிருக்கும் இந்த ரெட்மி நோட்7 போனுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சமாக 48 மெகா பக்சல் கொண்ட முதற்கட்ட கேமரா சென்சார் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சியோமி- ரெட்மியின் இந்த தயாரிப்பு வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி சரியாக மதியம் 12 மணிக்கு வெளியாகின்ற நிலையில் இந்த போனின் விலை பற்றிய தகவல்கள் இன்னும் அறியப்படவில்லை.
தற்போது வெளியாகியுள்ள டீசரில், ரெட்மி நோட் 7 போனின் கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் பளபளக்கும் கண்ணாடி டிசைன்கள், நெடுநேரம் தாக்குப்பிடிக்கும் பேட்டரி கட்டமைப்பு மற்றும் ஸ்பிளாஷ் ப்ரோடெக்ஷன் (splash protection) ஆகியவற்றுக்கும் இந்த புதிய மாடலில முக்கியதுவம் இருப்பது தெரிகிறது.
இப்படி பல அம்சங்கள் நிறைந்த இந்தப் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவைப் பொறுத்தவரை ஃபிளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காமில் மட்டுமே வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட் போனின் விலைப் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், சீனாவில் வெளியான விலையைப் போலவே இங்கும் மதிப்பிடப்படும் என எதிர்பார்கப்படுகிறது.
3ஜிபி ரேம்/ 32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூபாய் 10,500க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது. 4ஜிபி ரேம்/64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூபாய் 12,600க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது. இந்த போனின் அதிகப்படியான விலை 6ஜிபி ரேம்/ 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடலுக்கு இருக்கும். அது 14,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம்.
சீனாவில் ட்வைலைட் கோல்டு, ஃபான்டசி ப்ளூ மற்றும் பிரைட் பிளாக் போன்ற நிறங்களில் கடந்த மாதம் இந்த போன் வெளியானது. இந்தியாவில் இந்த போன் சிவப்பு, கறுப்பு மற்றும் நில நிறங்களில் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இந்த ரெட்மி நோட் 7 போன், இரண்டு சிம் கார்டு வசதியைக் கொண்டுள்ளது. 6.3 இஞ்ச் ஹெச்டி திரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 6 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதியையும் அடக்கியுள்ளது. ஏற்கெனவே வெளியான ரெட்மி நோட் வரிசை போன்களை விட இந்த போனில் சிறப்பாக ஸ்னிப் டிராகன் 660 SoC பிரசாஸ்சர் பொறுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக பட்ஜெட் போன்களில் சி டைப் சார்ஜிங் ஸ்லாட் இடம் பெறாத நிலையில், தற்போது ரெட்மி நோட் 7 போனில் இந்த புதிய அம்சம் இடம் பெற்றுள்ளது.
பின்புறம் அமைந்திருக்கும் இரண்டு பின்புற கேமராக்களில் இருக்கும் 48 மெகா பிக்சல் ப்ரைமரி கேமரா, சாம்சங் ஜிஎம் 1 சென்சாரால் இயங்குகிறது. இரண்டாம் நிலையில் 5 மெகா பிக்சல் சென்சாரும், செல்ஃபிகளுக்காக 13 மெகா பிக்சல் கேமராவும் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் சுமார் 4000 mAh பேட்டரி வசதியை ரெட்மி நோட் 7 பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு. போன் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கூடுதல் தகவல்களுக்காக காத்திருக்கவும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்