ரெட்மீ நோட் 7 Pro ஸ்மார்ட்போன் தற்போது முழு நேர விற்பனைக்கு வந்துள்ளது. ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi தளங்களில் விற்பனையாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன், மூன்று நாட்களுக்கு மட்டும் முழு நேர விற்பனையில் கிடைக்கப்பெரும் என சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக ரெட்மீ 'நோட் 7 Pro' இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் 'நோட் 7 ' ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தது. 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர் ஆகிய சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மீ இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள அறிவிப்பின்படி 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ நோட் 7 Pro' ஜூன் 30 வரை முழு நேர விற்பனையில் கிடைக்கப்பெரும் என குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, இந்த ஸ்மார்ட்போனுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மீ நோட் 7, கடந்த ஏப்ரல் மாதமே முழு நேர விற்பனைக்கு வந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளாஷ் சேலில் மட்டுமே விற்பனைக்கு விடப்பட்டது. மேலும், இந்த ஸ்மார்ட்போன்கள் 20 லட்சம் எண்ணிக்கையில் விற்றுப்போனதை அடுத்து, அதனை கொண்டாடும் வகையில் ரெட்மீ நோட் 7S என்ற ஸ்மார்ட்போனை சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது.
Mi fans, time to go crazy! Get your hands on #RedmiNote7Pro 6GB + 128GB whenever you want. Available on https://t.co/cwYEXdVQIo & @Flipkart till 30th June. pic.twitter.com/iTWbNR7hiC
— Redmi India (@RedmiIndia) June 27, 2019
ரெட்மீ 'நோட் 7 Pro': விலை!
4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு, 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு என்று இரண்டு வகைகளை கொண்டுள்ளது இந்த ரெட்மீ 'நோட் 7 Pro'. அவற்றில் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு ரெட்மீ 'நோட் 7 Pro'-வின் விலை 13,999 ரூபாய். 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு ரெட்மீ 'நோட் 7 Pro'-வின் விலை 16,999 ரூபாய். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும், நீலம் (Neptune Blue), சிவப்பு (Nebula Red), மற்றும் கருப்பு (Space Black) என்ற மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு வந்தது.
ஜூன் 30 வரை மட்டுமே இந்த ஸ்மார்ட்போன் முழு நேர விற்பனையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மீ 'நோட் 7 Pro': சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதிகளை கொண்ட இந்த ரெட்மீ 'நோட் 7 Pro' ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் அளவிலான FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், வாட்டர் ட்ராப் நாட்ச் திரை கொண்டுள்ளது. மேலும், இதில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் அளவிலான கேமரா என இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. முன்புறத்தில், 13 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
4000mAh பேட்டரி அளவை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், குவால்காம் அதிவேக சார்ஜ் 4.0 வசதியையும் கொண்டுள்ளது. டைப்-C சார்ஜர் போர்ட், 3.5mm ஹெட்போன் ஜேக்-உடன் 4G வசதி, வை-பை மற்றும் ப்ளூடூத் v5.0 ஆகிய வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்