முன்னதாக சியோமி தனது ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும், ஜூலை 25 வரை இந்த ஸ்மார்ட்போனை முழு நேர விற்பனையில் வைத்திருந்தது.
முழு நேர விற்பனையில் ரெட்மீ நோட் 7 Pro-வை பெற்றுக்கொள்ளுங்கள்
சியோமி நிறுவனத்தின் பிரபல பட்ஜெட் ஸ்மார்ட்போனான ரெட்மீ 'நோட் 7 Pro-வை, ஃப்ளாஷ் சேலில் பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே உள்ளது. அறிமுகமாகி பல நாட்கள் ஆகியும் ஃப்ளாஷ் சேலில் இதே நிலைதான். ஆனால், அந்த கடினத்தை குறைக்கும் வகையில் தனது ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும், ஜூலை 25 வரை இந்த ஸ்மார்ட்போனை முழு நேர விற்பனையில் வைத்திருந்தது. அந்த விற்பனை முடிந்த சில நாட்களிலேயே, மீண்டும் இந்த ஸ்மார்ட்போனை முழு நேர விற்பனையில் வைத்துள்ளது சியோமி நிறுவனம். தற்போது Mi மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய தளங்களில் விற்பனையில் உள்ள இந்த ஸ்மார்ட்போன், ஜூலை 31 வரை முழு நேர விற்பனையில் இருக்கும்.
Mi தளத்தில் அனைத்து வகைகளிலும், அனைத்து வண்ணங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஃப்ளிப்கார்ட் தளத்தில் 4GB+64GB மற்றும் 6GB+128GB என இரண்டு வகைகள் மட்டுமே, குறிப்பிட்ட வண்ணத்தில் மட்டுமே விற்பனையில் உள்ளது.
4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு, 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு மற்றும் 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு என்று மூன்று வகைகளில் இந்த ரெட்மீ 'நோட் 7 Pro 'விற்பனையில் உள்ளது. அவற்றில் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு ரெட்மீ 'நோட் 7 Pro'-வின் விலை 13,999 ரூபாய். 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு ரெட்மீ 'நோட் 7 Pro'-வின் விலை 15,999 ரூபாய். 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு ரெட்மீ 'நோட் 7 Pro'-வின் விலை 16,999 ரூபாய். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும், நீலம் (Neptune Blue), சிவப்பு (Nebula Red), மற்றும் கருப்பு (Space Black) என்ற மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு வந்தது.
இரண்டு நானோ சிம் வசதிகளை கொண்ட இந்த ரெட்மீ 'நோட் 7 Pro' ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் அளவிலான FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், வாட்டர் ட்ராப் நாட்ச் திரை கொண்டுள்ளது. மேலும், இதில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் அளவிலான கேமரா என இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. முன்புறத்தில், 13 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
4000mAh பேட்டரி அளவை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், குவால்காம் அதிவேக சார்ஜ் 4.0 வசதியையும் கொண்டுள்ளது. டைப்-C சார்ஜர் போர்ட், 3.5mm ஹெட்போன் ஜேக்-உடன் 4G வசதி, வை-பை மற்றும் ப்ளூடூத் v5.0 ஆகிய வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
This Strange New Crystal Could Power the Next Leap in Quantum Computing
The Most Exciting Exoplanet Discoveries of 2025: Know the Strange Worlds Scientists Have Found