விற்பனையின் ஒரு பகுதியாக, சியோமி தொலைபேசிகள், ஸ்மார்ட் டிவிகள், ஃபிட்னஸ் பேண்டுகள், ஸ்பீக்கர்கள் மற்றும் பிற பாகங்கள் ஆகியவற்றை தள்ளுபடியாக பெறலாம்.
வங்கித் தள்ளுபடிகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட கேஷ்பேக் சலுகைகளும் அட்டவணையில் உள்ளன
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இப்போது தங்கள் பண்டிகை விற்பனையை ஆன்லைன் இ-ரீடெய்லர்ஸ் மூலம் நடத்தவில்லை. சியோமியும் அதன் 'Diwali with Mi' விற்பனையுடன் செயல்படுகிறது. இந்த விற்பனையானது தொலைபேசிகள், தொலைக்காட்சிகள் மற்றும் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளில் விலைக் குறைப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட நேரச் சலுகைகளைக் கொண்டுவருகிறது. 'Diwali with Mi' சேல் இப்போது சியோமி இந்தியா இணையதளத்தில் அக்டோபர் 4 வரை காணலாம். விற்பனையின் ஒரு பகுதியாக, சியோமி தொலைபேசிகள், ஸ்மார்ட் டிவிகள், ஃபிட்னஸ் பேண்டுகள், ஸ்பீக்கர்கள் மற்றும் பிற பாகங்கள் ஆகியவற்றை தள்ளுபடியாக பெறலாம். இருப்பினும், விற்பனையில் முன்னோக்கி செல்லும் போது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு விலைக் குறைப்புக்களில் மாறுபடும். எனவே அவை கிடைக்கும்போது அவற்றை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
ஜியோமி இணையதளத்தில் சிறந்த தீபாவளி ஒப்பந்தங்கள் பிரிவின் கீழ், 32-inch Mi LED TV 4A Pro-வின் விலை தற்போதய தள்ளுபடியில் ரூ. 10,999 ஆகும். அதன் 43-inch-ன் விலை ரூ. 19,999-யாக உள்ளது. 10,000mAh Mi Power Bank 2i-யின் வழக்கமான விலை ரூ. 1,299. ஆனால், இப்போது ஆஃபரில் வெறும் ரூ. 799-க்கு விற்கப்படுகிறது. Mi Band 3 ஒரு குறிப்பிட்ட நேர விலைக் குறைப்பில் தற்போது ரூ. 1,799-யாக விற்பனை செய்யப்படுகிறது.
மேற்கண்ட ஒப்பந்தங்களுக்கு கூடுதலாக, Redmi Y3, Redmi Note 7 Pro, Redmi 7A மற்றும் Redmi Note 7S ஆகியவைற்றை Xiaomi தள்ளுபடி விலையில் வழங்குகிறது. Redmi Y3 மற்றும் Redmi 7A-வின் விற்பனை இன்று நள்ளிரவில் நேரலைக்கு வரும் என்றும், அதே நேரத்தில் Redmi Note 7 Pro மற்றும் Redmi Note 7S ஆகியவை ஒரே நாளில் தள்ளுபடியுடன் பட்டியலிடப்படும் என்றும் Xiaomi கூறுகிறது.
| Xiaomi தயாரிப்புகள் | விற்பனை விலை | வழக்கமான விலை |
|---|---|---|
| Redmi Note 7 Pro | ஆரம்ப விலை Rs. 11,999 | ஆரம்ப விலை Rs. 13,999 |
| Redmi 7A | ஆரம்ப விலை Rs. 5,499 | ஆரம்ப விலை Rs. 5,999 |
| Redmi Note 7S | ஆரம்ப விலை Rs. 8,999 | ஆரம்ப விலை Rs. 10,999 |
| Redmi Y3 | ஆரம்ப விலை Rs. 7,999 | ஆரம்ப விலை Rs. 9,999 |
| Mi LED TV 4A Pro (32-inch) | Rs. 10,999 | Rs. 12,999 |
| Mi LED TV 4A Pro (43-inch) | Rs. 19,999 | Rs. 29,999 |
| Mi Band 3 | Rs. 1,799 | Rs. 1,999 |
தீபாவளி பெஸ்ட்செல்லர்ஸ் பிரிவில், Xiaomi-யின் Mi LED TV 4C Pro ரூ. 10,999 ரூபாய்க்கும், அதே நேரத்தில் 55-inch Mi TV 4X Pro ரூ. 37.999 ரூபாய்க்கும் விற்பனையில் கிடைக்கும். சிறந்த விற்பனை பிரிவில், Mi Pocket Speaker-ன் வெளியீட்டு விலையான ரூ. 1,499யிலிருந்து, வெறும் ரூ. 799-க்கு கிடைக்கிறது. Mi Super Bass Wireless headphones வெளியீட்டு விலையான ரூ. 1,799-ஐ விட விலை குறைவாக ரூ. 999-க்கு விற்பனையில் கிடைக்கிறது. இருப்பினும், இந்த இரண்டு ஒப்பந்தங்களும் இன்னும் நேரலைக்கு வரவில்லை.
| Xiaomi தயாரிப்புகள் | விற்பனை விலை | வழக்கமான விலை |
|---|---|---|
| Redmi 7 | ஆரம்ப விலை Rs. 5,999 | ஆரம்ப விலை Rs. 7,999 |
| Poco F1 | ஆரம்ப விலை Rs. 15,999 | ஆரம்ப விலை Rs. 18,999 |
| Mi LED TV 4C PRO (32-inch) | Rs. 10,999 | Rs. 12,499 |
| Mi LED TV 4X PRO (55-inch) | Rs. 37,999 | Rs. 39,999 |
| Redmi K20 Pro | ஆரம்ப விலை Rs. 24,999 | ஆரம்ப விலை Rs. 27,999 |
| Redmi K20 | ஆரம்ப விலை Rs. 19,999 | ஆரம்ப விலை Rs. 21,999 |
Poco F1, Redmi 7, Redmi K20, மற்றும் Redmi K20 Pro ஆகியவை தள்ளுபடி விலைகளுடன் பட்டியலிடப்படும். இருப்பினும் முதல் இரண்டுக்கான தள்ளுபடிகள் இன்று நள்ளிரவில் நேரலையில் காணப்படும். ஒரு நாள் கழித்து, மற்ற இரண்டு தள்ளுபடி விலைகளையும் காணலாம்.
ஜியோமி இந்தியா இணையதளத்தில் The Celebrate Diwali With Mi Sale-இன் Re.1 ஃபிளாஷ் விற்பனை. அங்கு Redmi K20 மற்றும் Mi A3 போன்ற தொலைபேசிகளும், Mi Smart Band 4 மற்றும் Mi Soundbar போன்றவற்றை வெறும் Re.1-க்கு வாங்கலாம். முழுமையான ஒப்பந்தங்களின் தொகுப்பை இங்கே பார்க்கலாம். கூடுதல் தள்ளுபடியாக, எச்.டி.எஃப்.சி வங்கி அட்டை மற்றும் ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளுக்கு 10 சதவிகித உடனடி தள்ளுபடியையும், ஜூம்கார், ஸ்விக்கி மற்றும் பேடிஎம் வழங்கும் பல்வேறு சேவைகளுக்கான தள்ளுபடியையும் ஜியோமி வழங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch