ரெட்மீ நோட் 7 ப்ரோ ஸ்மார்ட் போன், தற்போது இந்தியாவில் ஓப்பன் சேல் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட் போன் முன்னதாக, லிமிட்டெட் கால விற்பனையில் மட்டுமே கிடைத்து வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் ரெட்மீ நோட் 7 வரிசை போன்கள் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, 50 லட்சம் போன்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது சியோமீ. ரெட்மீ நோட் 7 வரிசையில், ரெட்மீ நோட் 7 ப்ரோ, ரெட்மீ நோட் 7 மற்றும் ரெட்மீ நோட் 7s உள்ளிட்ட போன்கள் இருக்கின்றன.
இந்த ஓப்பன் சேல் மூலம், ரெட்மீ நோட் 7 ப்ரோ போனை, ஃப்ளிப்கார்ட், எம்ஐ ஹோம், எம்ஐ ஸ்டூடியோ மற்றும் எம்ஐ பார்ட்னர் கடைகளில் வாங்க முடியும்.
ரெட்மீ 'நோட் 7 Pro': விலை!
4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு, 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு மற்றும் 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு என்று மூன்று வகைகளில் இந்த ரெட்மீ 'நோட் 7 Pro 'விற்பனையில் உள்ளது. அவற்றில் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு ரெட்மீ 'நோட் 7 Pro'-வின் விலை 13,999 ரூபாய். 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு ரெட்மீ 'நோட் 7 Pro'-வின் விலை 15,999 ரூபாய். 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு ரெட்மீ 'நோட் 7 Pro'-வின் விலை 16,999 ரூபாய். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும், நீலம் (Neptune Blue), சிவப்பு (Nebula Red), மற்றும் கருப்பு (Space Black) என்ற மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு வந்தது.
இந்த விற்பனை மூலம் ஏர்டெல் டபுள் டேட்டா ப்ரமோஷன் ஆஃபர் கிடைக்கும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 1,120 ஜிபி 4ஜி டேட்டாவை, 10 மாதங்களுக்குப் பெறலாம். 249 அல்லது 349 ரூபாய் மூலம் இந்த ஆஃபரைப் பெற முடியும். மேலும் ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு அல்லது எச்.டி.எப்.சி வங்கி டெபிட் கார்டை பயன்படுத்தி ஃப்ளிப்கார்ட் தளத்தில் போனை வாங்கினால் 5 சதவிகித கேஷ் பேக் தரப்படும். கூடுதலாக நோ காஸ்ட் இ.எம்.ஐ ஆப்ஷனும் உள்ளது.
ரெட்மீ 'நோட் 7 Pro': சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதிகளை கொண்ட இந்த ரெட்மீ 'நோட் 7 Pro' ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் அளவிலான FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், வாட்டர் ட்ராப் நாட்ச் திரை கொண்டுள்ளது. மேலும், இதில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் அளவிலான கேமரா என இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. முன்புறத்தில், 13 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
4000mAh பேட்டரி அளவை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், குவால்காம் அதிவேக சார்ஜ் 4.0 வசதியையும் கொண்டுள்ளது. டைப்-C சார்ஜர் போர்ட், 3.5mm ஹெட்போன் ஜேக்-உடன் 4G வசதி, வை-பை மற்றும் ப்ளூடூத் v5.0 ஆகிய வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்