Realme X2 செவ்வாய்க்கிழமை இந்தியாவில் அறிமுகமானது. முதலில் Realme XT 730G என்று அழைக்கப்பட்ட Realme X2, gaming-focussed Qualcomm Snapdragon 730G SoC உடன் வருகிறது. செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின், குவாட் ரியர் கேமரா அமைப்பில், 64 மெகாபிக்சல் ஷூட்டர் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் Realme X2-வின் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 16,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 18.999-யாக விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. டாப்-ஆஃப்-லைன், 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 19,999 விலைக் குறியுடன் வருகிறது. மூன்று வகைகளும் Pearl Blue, Pearl Green மற்றும் Pearl White வண்ண விருப்பங்களில் வருகின்றன. மேலும், இந்த போன், Flipkart மற்றும் Realme India online store மூலம் டிசம்பர் 20 வெள்ளிக்கிழமை முதல் விற்பனைக்கு வரும். இது விரைவில் ஆஃப்லைன் கடைகள் வழியாக கிடைக்கும்.
Realme X2 மாடல் | விலை |
---|---|
Realme X2 (4GB, 64GB) | ரூ. 16,999 |
Realme X2 (6GB, 128GB) | ரூ. 18,999 |
Realme X2 (8GB, 128GB) | ரூ. 19,999 |
Realme X2-வின் அறிமுக சலுகைகளில், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கிரெடிட் கார்டில் ரூ. 1,500 உடனடி தள்ளுபடி, ரூ. 1,500 வரை MobiKwik பலன்கள், 6 மாதங்கள் வரை no-cost EMI மற்றும் ரூ.11,500 வரை ஜியோ பலன்கள் ஆகியவை அடங்கும்.
நினைவுகூர, Realme X2-வின் 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் சீனாவில் CNY 1,599 (சுமார் ரூ. 16,200) ஆரம்ப விலையுடன் அறிமுகமானது. சீன சந்தையில் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷனும் உள்ளது. இது CNY 1,899 (சுமார் ரூ. 19,200) விலைக் குறியுடன் வருகிறது.
டூயல்-சிம் (நானோ) Realme X2, ColorOS 6.1 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. இது 19.5:9 aspect ratio மற்றும் 91.5 percent screen-to-body ratio உடன் 6.4-inch full-HD+ (1080x2340 pixels) Super AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போனில், Corning Gorilla Glass 5 பாதுகாப்பும் உள்ளது. மேலும், கண் பராமரிப்புக்காக DC-like dimming மற்றும் night mode போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. மேலும், in-display fingerprint சென்சாரும் உள்ளது. Realme X2, Adreno 618 GPU மற்றும் 8GB RAM வரை இணைக்கப்பட்டு, Qualcomm Snapdragon 730 SoC-யால் இயக்கப்படுகிறது.
Realme X2-வின் குவாட் ரியர் கேமரா அமைப்பில் f/1.8 lens உடன் 64-megapixel முதன்மை சென்சார் மற்றும் f/2.25 super-wide angle lens உடன் 8-megapixel இரண்டாம் நிலை சென்சார் ஆகியவை அடங்கும். கேமரா அமைப்பில் f/2.4 aperture உடன் 2-megapixel macro shooter மற்றும் f/2.4 lens உடன் 2-megapixel depth சென்சார் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோவுக்கு, f/2.0 lens உடன் 32-megapixel செல்ஃபி கேமராவை பேக் செய்கிறது.
Realme X2, கேமரா அம்சங்களின் பட்டியலைக் கொண்டுள்ளது. இதில் 64MP mode, Super Nightscape, Panorama, HDR Super Wide-angle மற்றும் Super Macro Mode ஆகியவை அடங்கும். 30fps பிரேம் வீதத்தில் 4K வரை தெளிவுதிறன் கொண்ட வீடியோக்களை பதிவுசெய்யும் திறன் இந்த போனில் உள்ளது.
மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கக்கூடிய 64 ஜிபி மற்றும் 128 ஜிபி UFS2.1 ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரியல்மி வழங்கியுள்ளது. இந்த போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, dual-band Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். ஆன்போர்டு சென்சார்களில் accelerometer, ambient light, gyroscope, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும்.
Realme X2, 30W VOOC 4.0 ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்ப ஆதரவுடன் 4,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. தவிர, இந்த போன் 158.7x75.2x8.6mm மற்றும் 182 கிராம் எடை கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்