ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் சந்தைக்கு அப்பால், AI தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய அணியக்கூடிய சாதனங்களை (Wearables) உருவாக்கி வருகிறது.
Photo Credit: Meta
ஆப்பிளின் வதந்தியான ஸ்மார்ட் கண்ணாடிகள் மெட்டா ரே-பான் டிஸ்ப்ளேவுடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னைக்கு நம்ம டெக் உலகத்துல ஒரு 'பிக் நியூஸ்' (Big News) வந்திருக்கு. ஆப்பிள்னாலே நமக்கு ஐபோன் தான் ஞாபகத்துக்கு வரும், ஆனா இனிமே நிலைமை மாறப்போகுது. ஆப்பிள் நிறுவனம் அவங்களோட கவனத்தை இப்போ ஐபோன்ல இருந்து 'AI Wearables' பக்கம் திருப்பியிருக்காங்க. அதாவது நம்ம போடுற கண்ணாடி, கழுத்துல போடுற பெண்டண்ட், காதுல மாட்டுற ஏர்பாட்ஸ் - இது எல்லாத்துலயும் AI கொண்டு வரப்போறாங்க. இது உண்மையாவே 'நெக்ஸ்ட் லெவல்' (Next Level) அப்டேட்ங்க.
ப்ளூம்பெர்க் (Bloomberg) ரிப்போர்ட் படி, ஆப்பிள் இப்போ 'N50' அப்படிங்கிற கோட் நேம்ல ஒரு ஸ்மார்ட் கிளாஸ் உருவாக்கிட்டு இருக்காங்க.
டிஸ்ப்ளே கிடையாது: இதுல ஆரம்பத்துல லென்ஸ்ல எந்த டிஸ்ப்ளேயும் இருக்காதுன்னு சொல்றாங்க. ஆனா இதுல பவர்ஃபுல் கேமராக்கள் இருக்கும்.
என்ன பண்ணும்?: நீங்க ரோட்டுல போயிட்டு இருக்கும்போது ஒரு பொருளைப் பார்த்தா, அது என்ன பொருள், அதோட விலை என்னன்னு உங்க காதுல இருக்கிற ஸ்பீக்கர் வழியா சிரி (Siri) உங்களுக்கு சொல்லிடும்.
எப்போ வரும்?: இதோட புரொடக்ஷன் 2026 கடைசியில ஆரம்பிச்சு, 2027-ல மார்க்கெட்டுக்கு வரும்னு எதிர்பார்க்கப்படுது. இது மெட்டாவோட (Meta Ray-Ban) கண்ணாடியை விட ரொம்ப பிரீமியமா, அக்ரிலிக் மெட்டீரியல்ல ஸ்டைலா இருக்குமாம்.
அடுத்தது ஒரு வினோதமான ஆனா இன்ட்ரஸ்டிங்கான விஷயம். ஒரு ஏர்டேக் (AirTag) அளவுல சின்னதா ஒரு பெண்டண்ட் அல்லது கிளிப் மாதிரி ஒரு கருவியை ஆப்பிள் தயாரிச்சுட்டு வராங்க.
● இதை நீங்க கழுத்துல செயின் மாதிரியோ இல்ல சட்டையில கிளிப் மாதிரியோ மாட்டிக்கலாம்.
● இதுல இருக்கிற கேமரா நீங்க பார்க்கிறதை அப்படியே 'லைவா' ஸ்கேன் பண்ணும்.
● இதுக்குன்னு தனியா ஸ்கிரீன் தேவையில்லை, இது உங்க ஐபோன் கூட கனெக்ட் ஆகி வேலை செய்யும்.
● இது 'சிரி'-யோட கண்கள் மற்றும் காதுகளா செயல்படும்னு ஆப்பிள் இன்ஜினியர்ஸ் சொல்றாங்க.
நிறைய பேருக்கு இது ஆச்சரியமா இருக்கலாம். "ஏர்பாட்ஸ்ல எதுக்குங்க கேமரா?" அப்படின்னு கேக்குறீங்களா? இந்த கேமராக்கள் போட்டோ எடுக்கறதுக்காக கிடையாது. இது உங்களைச் சுத்தி என்ன நடக்குதுங்கிற 'AI Context'-ஐ புரிஞ்சுக்கிறதுக்காக. உதாரணத்துக்கு, நீங்க ஒரு ஹோட்டலுக்கு போறீங்கன்னா அங்க மெனு கார்டை பார்த்தாலே போதும், அதுல இருக்குற உணவுகளைப் பத்தி சிரி உங்களுக்கு விளக்கும். இந்த கேமரா ஏர்பாட்ஸ் தான் மத்த எல்லாத்தையும் விட சீக்கிரமா, அதாவது 2026-லேயே வரும்னு சொல்லப்படுது.
ஏற்கனவே மெட்டா (Meta) நிறுவனம் தங்களோட ரே-பான் கிளாஸ் மூலமா பெரிய ஹிட் அடிச்சிருக்காங்க. அதேபோல ஹியூமேன் AI பின் (Humane AI Pin) மாதிரியான ஸ்டார்ட்அப்களும் புது முயற்சியை செஞ்சாங்க. ஆப்பிள் இதுல பின்தங்கிடக்கூடாதுன்னு இப்போ வேகமா வேலை செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. முக்கியமா, 'விஷன் ப்ரோ' (Vision Pro) ஹெட்செட் ரொம்ப கனமா இருக்குன்னு மக்கள் சொன்னதால, இப்போ லேசான இந்த வேயரபிள்ஸ் பக்கம் ஆப்பிள் கவனம் செலுத்துது. சோ நண்பர்களே, ஐபோன் இல்லாமலேயே நம்ம வேலையெல்லாம் செய்யுற காலம் ரொம்ப பக்கத்துல வந்திருச்சு. ஆப்பிளோட இந்த AI கண்ணாடி வந்தா நீங்க வாங்குவீங்களா? இல்ல இது தேவையில்லாத ஆணி-னு நினைக்கிறீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications