கூகுள் நிறுவனம் தனது 'குயிக் ஷேர்' (Quick Share) தொழில்நுட்பத்தை ஆப்பிளின் 'ஏர்டிராப்' உடன் இணையும் வகையில் மேம்படுத்தியுள்ளது.
Photo Credit: Google
பிக்சல் 9 பயனர்கள் இனி நேரடியாக ஆப்பிள் சாதனங்களுக்கு கோப்புகளை பகிர முடியும் இன்று முதல்
இன்னைக்கு நாம ஒரு மிக முக்கியமான டெக் புரட்சியைப் பத்தி தான் பார்க்கப்போறோம். பொதுவா ஆண்ட்ராய்டு யூசர்ஸுக்கும் ஐபோன் யூசர்ஸுக்கும் நடுவுல இருக்குற பெரிய பிரச்சனையே இந்த ஃபைல் ஷேரிங் தான். 'உன்கிட்ட ஏர்டிராப் இருக்கா?'ன்னு ஐபோன் காரங்க கேக்குறப்போ, நாம வாட்ஸ்அப்லயோ இல்ல டெலிகிராம்லயோ தான் போட்டோ அனுப்புவோம். ஆனா இனிமே அந்த கவலை வேணாம்! நம்ம கூகுள் ஒரு செம வேலையை செஞ்சிருக்காங்க.
அவங்களோட Quick Share இப்போ ஆப்பிளோட AirDrop கூட கை கோர்த்திருக்கு. அதுவும் நம்ம Pixel 9 சீரிஸ்க்கு இந்த வசதி இப்போ வந்தாச்சு. கடந்த நவம்பர் மாசம் பிக்சல் 10 (Pixel 10) லான்ச் ஆனப்போ, கூகுள் ஒரு விஷயத்தை சொன்னாங்க. அதாவது, குயிக் ஷேர் மூலமா ஐபோன்களுக்கு நேரடியா ஃபைல் அனுப்ப முடியும்னு சொன்னாங்க. அப்போ பிக்சல் 9 யூசர்ஸ்லாம் 'எங்களுக்கு இல்லையா?'ன்னு கேட்டாங்க. அவங்களுக்காகவே இப்போ பிப்ரவரி 18, 2026 அன்னைக்கு கூகுள் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்காங்க.
இதன் மூலம், Pixel 9, Pixel 9 Pro, Pixel 9 Pro XL மற்றும் Pixel 9 Pro Fold வச்சிருக்கறவங்க இந்த வசதியை பயன்படுத்தலாம். ஆனா ஒரு சின்ன வருத்தமான விஷயம், பட்ஜெட் மாடலான Pixel 9a-க்கு இப்போதைக்கு இந்த வசதி கிடையாதுன்னு கூகுள் சொல்லிட்டாங்க.
இதுக்கு எந்த தேர்டு பார்ட்டி ஆப்பும் (Third-party app) தேவையில்லைங்க.
"இது சேஃப் தானா?"ன்னு நீங்க கேட்கலாம். கூகுள் இதைப் பத்தி தெளிவா சொல்லிருக்காங்க. இது 'Multi-layered Security' தொழில்நுட்பத்துல இயங்குது. அதாவது உங்க டேட்டா எந்த ஒரு கிளவுட் சர்வர் வழியாகவும் போகாது. நேரடியா ப்ளூடூத் மற்றும் வைஃபை (Direct Peer-to-Peer) மூலமா தான் போகும். இதனால உங்க பிரைவசிக்கு எந்த ஆபத்தும் கிடையாது.
இப்போதைக்கு கூகுள் பிக்சல் 9 மற்றும் 10 சீரிஸ்க்கு மட்டும் தான் இது இருக்கு. ஆனா கவலைப்படாதீங்க, சாம்சங் (Samsung) மற்றும் நத்திங் (Nothing) போன்ற மற்ற போன்களுக்கும் இந்த வசதியை கொண்டு வர கூகுள் பிளான் பண்ணிட்டு இருக்காங்க. வர்ற மே மாசம் நடக்கப்போற Google I/O 2026 நிகழ்வுல இதைப் பத்தின பெரிய அறிவிப்பு வரும்னு எதிர்பார்க்கலாம். சோ நண்பர்களே, கூகுளோட இந்த மூவ் உண்மையாவே ஒரு 'கேம் சேஞ்சர்' (Game Changer). ஐபோன் வச்சிருக்கற உங்க ஃப்ரெண்ட்ஸ் கிட்ட இனிமே கெத்தா 'டேய் ஏர்டிராப் ஆன் பண்ணு, நான் போட்டோ அனுப்புறேன்னு சொல்லலாம். இந்த அப்டேட் உங்களுக்கு பிடிச்சிருக்கா? இல்ல நீங்க இன்னும் வாட்ஸ்அப்ல தான் போட்டோ அனுப்புவீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Qualcomm Could Bring Samsung’s 2nm Process to Future Snapdragon Flagships: Here’s What We Know
Xiaomi 18 and Redmi K100 to Launch Soon as Phones Reportedly Appear on Certification Sites