போக்கோ நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் கில்லர் 'Poco X8 Pro' கீக்பெஞ்ச் தளத்தில் சிக்கியுள்ளது.
Photo Credit: Poco
Poco X8 Pro கீக்பெஞ்ச் மதிப்பெண்கள் Dimensity 8500 Ultra 12GB RAM Android 16
இன்னைக்கு நம்ம டெக் உலகத்துல வைரலா போயிட்டு இருக்குற ஒரு முக்கியமான அப்டேட் பத்தி தான் பார்க்கப்போறோம். பட்ஜெட் விலையில பவர்ஃபுல் பெர்ஃபாமன்ஸ் குடுக்குறதுல Poco எப்போதுமே கில்லி தான். இப்போ அந்த வரிசையில அடுத்ததா வரப்போற Poco X8 Pro பத்தின அதிரடி தகவல்கள் கீக்பெஞ்ச் (Geekbench) தளத்துல இருந்து கசிஞ்சிருக்கு. கீக்பெஞ்ச் லிஸ்டிங் படி, Poco X8 Pro (Model Number: 2511FPC34G) சிங்கிள்-கோர் டெஸ்ட்ல 1708 புள்ளிகளையும், மல்டி-கோர் டெஸ்ட்ல 6297 புள்ளிகளையும் எடுத்து அசத்தியிருக்கு. இதுக்கு முக்கியமான காரணம் இதுல பயன்படுத்தப்பட்டிருக்க MediaTek Dimensity 8500 Ultra சிப்செட் தான். இந்த சிப்செட் கூடவே 12GB RAM இருக்கப்போறதுனால, கேமிங் பண்றவங்களுக்கு எந்த லேக்கும் இல்லாம ஒரு ஸ்மூத்தான எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்.
நம்ம இப்போதான் ஆண்ட்ராய்டு 15-க்கு பழகிட்டு இருக்கோம், ஆனா போக்கோ ஒரு படி மேல போய் Android 16 வெர்ஷனை இந்த போன்ல கொண்டு வரப்போறாங்க. இது Xiaomi-யோட லேட்டஸ்ட் HyperOS 3 ஸ்கின் மூலமா இயங்கும். இதனால இன்னும் நிறைய புது ஏஐ (AI) பீச்சர்ஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை நம்ம எதிர்பார்க்கலாம். லீக் ஆன தகவல்படி, இந்த போன்ல 6.59-inch 1.5K AMOLED டிஸ்ப்ளே இருக்கப்போகுது. 120Hz ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் 3500 nits பீக் பிரைட்னஸ் இருக்குறதுனால வெயில்லயும் ஸ்கிரீன் ரொம்ப தெளிவா தெரியும். கேமராவை
● பின்பக்கம்: 50MP மெயின் கேமரா (OIS வசதியுடன்) மற்றும் 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் இருக்கும்.
● முன்பக்கம்: செல்பிக்காக 20MP கேமரா கொடுக்கப்பட்டிருக்கு.
இந்த போனோட மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டே இதோட பேட்டரி தான். சீனாவில லான்ச் ஆன Redmi Turbo 5-வோட ரீபிராண்டட் வெர்ஷனா இது வரப்போறதுனால, இதுல 7560mAh பேட்டரி இருக்கலாம்னு சொல்லப்படுது. ஆனா குளோபல் மாடல்ல இது 6500mAh-ஆகவும் குறைய வாய்ப்பிருக்கு. இருந்தாலும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் இருக்குறதுனால, இவ்வளவு பெரிய பேட்டரியை கூட ரொம்ப வேகமா சார்ஜ் பண்ணிடலாம்.
வர்ற மார்ச் மாசம் இந்த போன் குளோபல் மார்க்கெட்டுக்கும், அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் வரும்னு எதிர்பார்க்கப்படுது. இந்திய விலையை பொறுத்தவரை, இது ₹30,000 முதல் ₹35,000 ரேஞ்சுக்குள்ள இருக்க அதிக வாய்ப்பு இருக்கு.
நீங்க ஒரு கேமிங் போன் வாங்கணும்னு ஐடியால இருந்தா, கண்டிப்பா இந்த Poco X8 Pro-வை உங்க லிஸ்ட்ல சேர்த்துக்கோங்க. ஏன்னா இந்த விலையில இவ்வளவு பவர்ஃபுல் சிப்செட் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். இந்த போக்கோ போன் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? இது iQOO இல்லனா Realme போன்களுக்கு டஃப் குடுக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Cyberpunk 2077 Has Sold 40 Million Copies, CD Projekt Red Confirms
Nokia 235 4G (2026), 215 4G (2026) Launched Alongside Nokia 210 4G, and 200 4G With AI Assistant Button
Samsung Galaxy S27 Ultra Battery Details Leaked; Could Top iPhone 18 Pro Max's Battery Capacity