ஆப்பிளின் முதல் 2026 நிகழ்வு மார்ச் 4-ல்! iPhone 17e, புதிய மேக்புக் ப்ரோ மற்றும் ஐபேட் அப்டேட்கள் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் இங்கே.
Photo Credit: Apple
மார்ச் 4 ஆப்பிள் நிகழ்வில் iPhone 17e மலிவு மேக்புக் M5 புதிய ஐபேட் எதிர்பார்ப்பு
ஆப்பிள் ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான அப்டேட் வந்திருக்கு. 2026-ஆம் ஆண்டோட தன்னோட முதல் பெரிய நிகழ்வை ஆப்பிள் அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்காங்க. மார்ச் 4-ஆம் தேதி, அதாவது இன்னும் சில வாரங்கள்ல ஆப்பிள் ஒரு "Special Apple Experience" நிகழ்வை நடத்தப்போறாங்க. இது கியூபெர்டினோவில இருக்கிற ஆப்பிள் பார்க்ல மட்டும் இல்லாம, நியூயார்க், லண்டன் மற்றும் ஷாங்காய்னு மூணு இடங்கள்ல ஒரே நேரத்துல நடக்கப்போகுது. வழக்கமா ஆப்பிள் 'ஈவென்ட்' (Event)னு தான் சொல்லுவாங்க, ஆமா ஆனா இந்த முறை 'எக்ஸ்பீரியன்ஸ்' (Experience)னு சொல்லிருக்காங்க. இதுல இருந்து என்ன தெரியுதுன்னா, இது ஒரு பெரிய மேடைப் பேச்சா இல்லாம, புதுசா வர்ற ப்ராடக்ட்ஸை நேர்ல தொட்டு பார்த்து அனுபவிக்கிற மாதிரியான ஒரு நிகழ்வா இருக்கும்னு டெக் நிபுணர்கள் சொல்றாங்க. இந்திய நேரப்படி மார்ச் 4-ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு இது தொடங்கும்.
iPhone 17e: போன வருஷம் வந்த iPhone 16e-வோட அடுத்த மாடல் இது. இதுல ரொம்ப எதிர்பார்க்கப்படுற விஷயம் என்னன்னா, இதுல A19 சிப்செட் மற்றும் முதன்முறையா MagSafe சார்ஜிங் வசதி வரும்னு சொல்றாங்க. 6.1 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் சிங்கிள் 48MP கேமரா இருக்குற இந்த போன், பட்ஜெட்ல ஐபோன் வாங்கணும்னு நினைக்கிறவங்களுக்கு ஒரு வரப்பிரசாதமா இருக்கும். இதோட விலை சுமார் ₹59,900-லிருந்து தொடங்கலாம்.
லோ-காஸ்ட் மேக்புக் (Low-cost MacBook): இதுதான் இந்த ஈவென்ட்டோட 'ஹீரோ'வா இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. சுமாராக ₹60,000 முதல் ₹90,000-க்குள்ள ஒரு மேக்புக்க ஆப்பிள் லான்ச் பண்ணப்போறாங்க. இதுல iPhone 16 Pro-ல இருக்குற அதே A18 Pro சிப்செட்டை யூஸ் பண்ணப்போறாங்களாம். அதுமட்டும் இல்லாம, இது ரொம்பவே கலர்ஃபுல்லா, அதாவது மஞ்சள், பச்சை, நீலம்னு ரொம்ப "ப்ளேஃபுல்" நிறங்கள்ல வரப்போகுது.
MacBook Pro & MacBook Air: புதிய M5, M5 Pro, மற்றும் M5 Max சிப்செட்கள் கொண்ட மேக்புக் ப்ரோ மாடல்களும் இந்த நிகழ்வுல அறிமுகமாகலாம். இது மல்டிடாஸ்கிங் மற்றும் ஏஐ (AI) வேலைகளுக்கு வேற லெவல் வேகத்தைக் குடுக்கும்.
புதிய iPads: 12-வது தலைமுறை ஐபேட் (A18 சிப் உடன்) மற்றும் M4 சிப் கொண்ட புதிய iPad Air மாடல்களும் இந்த லிஸ்ட்ல இருக்கு.
ஆப்பிள் அனுப்புன இன்வைட் கார்டுல ஆப்பிள் லோகோ 3D டிசைன்ல இருக்கு. இதுல மஞ்சள், பச்சை மற்றும் நீல நிற வட்டங்கள் இருக்கு. ஆச்சரியமான விஷயம் என்னன்னா, இதே நிறங்கள்ல தான் பட்ஜெட் மேக்புக் டெஸ்ட் பண்ணப்பட்டதா ஏற்கனவே லீக்ஸ் வந்துச்சு. சோ, கண்டிப்பா மார்ச் 4-ல ஒரு கலர்ஃபுல்லான மேக்புக் லான்ச் ஆகுறது கிட்டத்தட்ட உறுதி. நீங்க ஒரு ஐபோன் இல்ல மேக்புக் வாங்க பிளான் பண்ணிட்டு இருந்தா, மார்ச் 4 வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. ஆப்பிள் உங்களுக்காக ஒரு பட்ஜெட் சர்ப்ரைஸ் வச்சிருக்காங்க.இந்த அப்டேட் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? ஆப்பிள் பட்ஜெட் மேக்புக் கொண்டு வந்தா வாங்குவீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999