ஓப்போ ரெனோ 3 சீனா வேரியண்ட்டில் MediaTek Dimesity 1000L SoC-யால் இயக்கப்படுகிறது, உலகளாவிய வேரியண்ட்டில் Helio P90 SoC இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Oppo Reno 3 Pro, 44 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சாருடன் hole-punch டிஸ்பிளேவில் இரட்டை செல்பி கேமரா அமைப்பை பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குச் செல்லும் Oppo Reno 3 Pro, 44 மெகாபிக்சல் டூயல் hole-punch கேமரா அமைப்பு கொண்ட உலகின் முதல் போனாகும் என்றும் நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது.
செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட பாரம்பரிய VOOC 4.0 ஃபாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பம், 4,000mAh பேட்டரியை 30 நிமிடங்களில் 67 சதவீதமாகவும், 73 நிமிடங்களில் 100 சதவீதமாகவும் சார்ஜ் செய்ய உதவுகிறது.