Oppo Reno 3 சீரிஸ் dual-mode 5G ஆதரவுடன் வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
Oppo Reno 3, quad rear கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது
ஓப்போவின் தனிப்பயன் ஆண்ட்ராய்டு தோலின் சமீபத்திய மறு செய்கையான ColorOS 7-ஐ நவம்பர் 20 ஆம் தேதி சீனாவில் ஒரு நிகழ்விலும், பின்னர் இந்தியாவில் நவம்பர் 26 ஆம் தேதியிலும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என்று ஓப்போ வெளிப்படுத்தியுள்ளது. ColorOS 7-ஐ இயக்கும் முதல் போன்களாக ஓப்போ இப்போது அறிவித்துள்ளது. இது Oppo Reno 3 சீரிஸின் கீழ் வரும். Oppo Reno 3 சீரிஸைப் பற்றி அதிகாரப்பூர்வமாக எதையும் நாங்கள் கேட்பது இதுவே முதல் முறை. கூடுதலாக, Oppo Reno3 சீரிஸ் dual-mode 5G ஆதரவுடன் வரும் என்றும், டிசம்பரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் ஓப்போ வெளிப்படுத்தியுள்ளது.
Oppo Reno 3 வெளியீடு:
அதிகாரப்பூர்வ ஓப்போ வெய்போ கணக்கு இன்று ஒரு பதிவினை பகிர்ந்து கொண்டது. Oppo Reno 3 சீரிஸ் dual-mode 5G ஆதரவுடன் வரும் என்று அறிவித்தது. இதன் பொருள் முக்கியமாக NSA மற்றும் SA தரங்களுடன் பொருந்தக்கூடியது. ColorOS 7 உடன் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போன் வரிசையாக Oppo Reno3 சீரிஸ் இருக்கும் என்றும் அந்த பதிவு கூறுகிறது.
இருப்பினும், Oppo Reno 3 சீரிஸ் போன்களில் இயங்கும் ColorOS 7 பதிப்பு, ஆண்ட்ராய்டு 10-ஐ அடிப்படையாகக் கொண்டதா, அல்லது அது Android Pie-யில் சிக்கியிருக்குமா என்பது தெரியவில்லை. Oppo Reno 3 சீரிஸ் அடுத்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும், Color OS Reno 3 வரிசை இந்திய சந்தைக்கு செல்லும் என்பதை நிறுவனம் வெளியிடவில்லை.
quad rear கேமரா அமைப்பை பேக் செய்ய Oppo Reno 3 முனைகிறது. அதில் 60 மெகாபிக்சல் முதன்மை கேமராவும், 8-megapixel சென்சார், 13-megapixel கேமரா மற்றும் 2-megapixel shooter ஆகியவை அடங்கும், அதே நேரத்தில், 32-megapixel முன் கேமரா மூலம் செல்பி கையாளப்படும். இது 90Hz refresh rate உடன் 6.5-inch full-HD+ (1080x2400 pixels) AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்றும், 8GB of LPDDR4X RAM மற்றும் 256GB வரை இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் Snapdragon 735 SoC சக்தியை ஈர்க்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பிட்டுள்ளபடி, இந்த போன் dual-mode 5G ஆதரவுடன் வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
New FIFA Game to Launch on Netflix Games in Time for FIFA World Cup Next Year
Honor Magic V6 Tipped to Launch With 7,200mAh Dual-Cell Battery, Snapdragon 8 Elite Gen 5 SoC