Oppo Reno 3 Pro விவரக்குறிப்புகளில் குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆகியவை அடங்கும்.
Photo Credit: 91Mobiles
Oppo Reno 3 Pro, இந்தியாவில் டூயல் hole-punch செல்பி கேமரா மூலம் அறிமுகமாகும்
விரைவில் அறிமுகம் செய்யவுள்ள சீன நிறுவனத்தின் சமீபத்திய முதன்மை ஸ்மார்ட்போனான Oppo Reno 3 Pro இந்தியாவில் உள்ள ஒரு சில்லறை கடையில் காணப்பட்டதாக ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Reno 3 Pro-வின் இந்தியா பதிப்பு வேலைகளில் இருப்பதாக ஒப்போ அதிகாரப்பூர்வமாக அறிவித்த சில நாட்களில் இந்த புதிய வளர்ச்சி வருகிறது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo Reno 3 Pro-வில் புதிய மாடலில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Reno 3 Pro-வின் சீனா மாடலில் கிடைக்கும் ஒற்றை செல்ஃபி கேமராவைப் போலல்லாமல் டூயல் hole-punch செல்பி கேமரா இருப்பது முக்கிய வேறுபாடுகளில் ஒன்றாகும்.
Oppo Reno 3 Pro-வின் இந்திய பதிப்பு நாட்டில் ஒரு சில்லறை கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக 91Mobiles தெரிவிக்கின்றன. புதிய ஒப்போ போனின் வடிவமைப்பைக் காண்பிப்பதற்காக ஒரு படமும் ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளது. இந்த படத்தில், ஸ்மார்ட்போன் மற்றும் அதன் முக்கிய விவரக்குறிப்புகளை பரிந்துரைக்கும் ஒரு திரை பாதுகாப்பாளரைக் கொண்டுள்ளது. மேலும், இந்த வார தொடக்கத்தில் Reno 3 Pro-வில் நாம் கண்ட மாத்திரை வடிவ டூயல் hole-punch செல்பி கேமராவை இது எடுத்துக்காட்டுகிறது. செல்ஃபி கேமரா அமைப்பு ஏற்கனவே 44 மெகாபிக்சல் முதன்மை சென்சார் வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கசிந்த படத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டதை நாங்கள் நம்பினால், இந்தியாவில் Oppo Reno 3 Pro, 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 20x ஜூம் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் மற்றும் 30W VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் உள்ளது.
Oppo துணைத் தலைவரும், இந்தியா R&D தலைவருமான தஸ்லீம் ஆரிஃப் (Tasleem Arif) சமீபத்தில் ஒரு ட்வீட் மூலம் இந்தியாவில் Reno 3 Pro, 4 ஜி விவரக்குறிப்புகளுடன் வரும் என்று தெரியவந்தது. இதன் பொருள் டிசம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 5 ஜி ஆதரவு Reno 3 Pro-வில் மாற்றங்களின் பட்டியல் இருக்கும். Amazon மற்றும் Flipkart புதிய ஸ்மார்ட்போனின் ஆன்லைனில் கிடைப்பதை பரிந்துரைக்க மைக்ரோசைட்டுகளை கொண்டுள்ளன.
இந்தியாவில் Oppo Reno 3 Pro வெளியீடு March 2-ஆம் தேதிக்கு நடைபெறும். இதற்கிடையில், அடுத்த மாத தொடக்கத்தில் நாட்டில் எதைப் பெறுவோம் என்பதைக் குறிக்கும் சில டீஸர்கள் மற்றும் கசிவுகளை நாம் எதிர்பார்க்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters