குவாட் ரியர் கேமராக்களுடன் வெளியானது Oppo Reno 3, Oppo Reno 3 Pro!

குவாட் ரியர் கேமராக்களுடன் வெளியானது Oppo Reno 3, Oppo Reno 3 Pro!

Oppo Reno 3 Pro, 90Hz refresh rate உடன் வளைந்த டிஸ்பிளே மற்றும் hole-punch-ஐக் கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • Oppo Reno 3 Pro, 48-மெகாபிக்சல் பிரதான கேமரவைக் கொண்டுள்ளது
  • இது EIS ஆதரவுடன் 13-megapixel telephoto lens உடன் வருகிறது
  • Oppo Reno 3, VOOC 4.0 ஆதரவுடன் 4,025mAh பேட்டரியை பேக் செய்கிறது
விளம்பரம்

Reno 3 சீரிஸில் இரண்டு புதிய போன்களை ஓப்போ சேர்த்துள்ளது – Oppo Reno 3 மற்றும் Oppo Reno 3 Pro. சீனாவில் நடந்த நிகழ்வில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. Oppo Reno 3 மற்றும் Oppo Reno 3 Pro ஆகிய இரண்டு போன்களும் dual-mode 5G-யை ஆதரிக்கிறது. 


Oppo Reno 3-யின் விலை, விற்பனை தேதி:

Oppo Reno 3-யின் 8GB + 128GB வேரியண்ட் CNY 3,399 (சுமார் ரூ. 34,000)-யாகவும், அதன் higher-end 12GB + 128GB மாடல் CNY 3,699 (சுமார் ரூ. 36,999)-யாகவும் விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது சீனாவில் டிசம்பர் 31 முதல் விற்பனைக்கு வரும். ஆனால், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் இது கிடைப்பது குறித்து எந்த வார்த்தையும் இல்லை.இந்த போன் மொத்தம் 4 வண்ண விருப்பங்களில் வருகிறது - Misty White, Moon Night Black, Sunrise Impression மற்றும் Blue Starry Night. 

oppo reno 3 body Oppo Reno 3

Oppo Reno 3, octa-core MediaTek Dimensity 1000L SoC-யால் இயக்கப்படுகிறது

Oppo Reno 3 Pro-வின் விலை, விற்பனை தேதி:

Oppo Reno 3 Pro-வின் 8GB + 128GB மாடல் CNY 3,999 (சுமார் ரூ. 40,000)-யாகவும், அதன் top-end 12GB + 256GB மாடல் CNY 4,499 (சுமார் ரூ. 45,000)-யாகவும் விலையிடப்பட்டுள்ளது. இந்த போனின் அடிப்படை மாடல் டிசம்பர் 31 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும். அதே நேரத்தில் உயர்நிலை வேரியண்ட் ஜனவரி 10 முதல் விற்பனைக்கு வரும். இது Misty White, Moon Night Black, Sunrise Impression, மற்றும் Blue Starry Night வண்ண விருப்பங்களில் வருகிறது.


Oppo Reno 3 Pro Pantone Edition, Enco Free விலை, விற்பனை தேதி:

Oppo Reno 3 Pro-வின் Pantone Edition-ஐயும் ஓப்போ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்  விலை CNY 4,199 (சுமார் ரூ. 42,000) ஆகும். ஜனவரி 10-ஆம் தேதி விற்பனை தொடங்கும். கடைசியாக, நிறுவனம் Enco Free true wireless earbuds-ஐ CNY (சுமார் ரூ. 7,000)-க்கு வெளியிட்டது. இது ஜனவரி 10 முதல் விற்பனைக்கு வரும். அவை Black, Pink மற்றும் White வண்ண விருப்பங்களில் வருகின்றன.


Oppo Reno 3 Pro-வின் விவரக்குறிப்புகள்:

டூயல்-சிம் Oppo Reno 3 Pro, ColorOS 7 உடன் Android 10-ல் இயங்குகிறது. இது 90Hz refresh rate, Gorilla Glass 5 protection மற்றும் peak brightness of 800 nits (HBM) உடன் 6.5-inch full-HD+ (1080 x 2400 pixels) curved AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மற்ற டிஸ்பிளே பண்புகளில் 402ppi pixel density, 5000000: 1 contrast ratio, 93.4 percent screen-to-body ratio மற்றும் HDR10+ ஆதரவு ஆகியவை அடங்கும். Oppo Reno 3 Pro, 12GB RAM உடன் இணைக்கப்பட்டு, Qualcomm Snapdragon 765G SoC-யால் இயக்கப்படுகிறது.

oppo panton Oppo

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் Oppo Reno 3 Pro Pantone Edition-ஐயும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

Oppo Reno 3 Pro-வின் குவார்ட் ரியர் கேமரா அமைப்பில் Sony IMX586 சென்சார் மற்றும் f/1.7 aperture உடன் by OIS மற்றும் EIS உதவியோடு 48-megapixel shooter-ஐக் கொண்டுள்ளது. இதனுடன், 116-degrees field of view உடன் 8-megapixel ultra-wide-angle கேமரா, EIS மற்றும் 5x hybrid zoom ஆதரவுடன் 13-megapixel telephoto கேமரா மற்றும் f/2.4 aperture உடன் 2-megapixel monochrome கேமரா சேர்க்கப்படுள்ளது. முன்புறத்தில் 32-megapixel கேமரா உள்ளது. இது f/2.4 lens-ஐ hole-punch உள்ளே வைக்கப்பட்டுள்ளது.

இந்த சமீபத்திய ஓப்போ போன் VOOC Flash Charge 4.0 ஆதரவுடன் 4,025mAh பேட்டரியை பேக் செய்கிறது. அங்கிகாரத்திற்காக in-display fingerprint சென்சாருடன் வருகிறது மற்றும் multi-function NFC-ஐ ஆதரரிக்கிறது. இணைப்பு விருப்பங்களில் 5G, 4G VoLTE, Bluetooth 5.1, Wi-Fi a/b/g/n/ac, USB Type-C port, GPS/A-GPS, Beidou, Glonass மற்றும் Galileo ஆகியவை அடங்கும். போனின் ஆன்போர்டு சென்சார்களில் compass, ambient light sensor, proximity sensor, accelerometer, gravity sensor, gyroscope மற்றும் pedometer ஆகியவை அடங்கும்.


Oppo Reno 3-யின் விவரக்குறிப்புகள்:

Oppo Reno 3, waterdrop notch உடன் 6.4-inch TUV Rheinland-certified டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 12GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core 7nm MediaTek Dimensity 1000L 5G SoC-யில் இருந்து சக்தியை ஈர்க்கிறது. ஓப்போ, f/1.8 aperture உடன் 64-megapixel பிரதான கேமரா மற்றும் 8-megapixel wide-angle சென்சார் ஆகியவை குவாட் ரியர் கேமரா அமைப்பில் வழங்குகிறது.

செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்கு 32-megapixel முன் கேமரா உள்ளது. Oppo Reno 3 Pro-வைப் போலவே, Oppo Reno 3-யும் அங்கிகாரத்திற்காக in-display fingerprint சென்சாருடன் வருகிறது. இந்த போன் VOOC 4.0 fast charging ஆதரவுடன் 4,025mAh பேட்டரியுடன் வருகிறது.

  • KEY SPECS
  • NEWS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 765G
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4025mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »