ஓப்போ ரெனோ 3 குளோபல் வேரியண்ட் மார்ச் 16-ஆம் தேதி இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் பேஸ்புக் பதிவு மூலம் தெரிவித்துள்ளது. போனின் அரோரா ப்ளூ வேரியண்ட் மற்றும் அதன் குவாட் பின்புற கேமராக்களைக் காட்டும் ஒரு குறுகிய டீஸர் வீடியோவுடன் இந்த பதிவு வருகிறது. பின்புற கேமராக்களைப் பற்றி பெருமை பேசும் ‘#StayClearInEveryShot' மற்றும் நாட்சிற்குள் செல்பி ஷூட்டர் என்று அது கூறுகிறது. ஓப்போ ரெனோ 3-யின் சர்வதேச பதிப்பாக இது இருக்கும், இது முன்னர் சீன சந்தையில் வெளியிடப்பட்டது.
ஓப்போ இலங்கையின் பேஸ்புக் பதிவு பின்வருமாறு கூறுகிறது, “#OPPOReno3-யின் பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு நாள் முழுவதும் உங்களுக்கு வசதியாக இருக்கிறது. #StayClearInEveryShot மார்ச் 16 அன்று துவங்குகிறது! ” வீடியோ சில தெளிவற்ற படங்களைக் காட்டுகிறது, ஆனால், கேமராக்களின் செயல்திறனில் கவனம் செலுத்துகிறது என்பது தெளிவாகிறது. ஓப்போ ரெனோ 3-யின் சமீபத்திய விவரக்குறிப்புகள் கசிவிலிருந்து, போனில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மோனோ கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செல்ஃபி ஷூட்டர் 44 மெகாபிக்சல்கள் ஆகும். கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட சீன வேரியண்ட்டுடன் ஒப்பிடுகையில், கேமராக்களில் சிறிது வித்தியாசம் உள்ளது, ஏனெனில் இது 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸுடன் 2 மெகாபிக்சல் டெப்த் மோனோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன் கேமரா 32 மெகாபிக்சல்கள் ஆகும்.
சீன வேரியண்ட் MediaTek Dimesity 1000L SoC-யால் இயக்கப்படுகிறது. Oppo ரெனோ 3-யின் சர்வதேச வேரியண்ட் MediaTek Helio P90 SoC-ஐக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தையது 5ஜி ஆதரவைக் கொண்டுள்ளது, அடுத்து வெளியாகவிருப்பது அந்த இணைப்பு விருப்பத்தைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு வேரியண்டுகளும் 4,025mAh-ல் ஒரே பேட்டரி திறனைக் கொண்டுள்ளன என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.
ஓப்போ ரெனோ 3-யின் சர்வதேச வேரியண்ட்டின் அறிமுகம் இன்னும் காத்திருக்கையில், நிறுவனம் ஏற்கனவே, இந்தியாவில் Oppo Reno 3 Pro 128ஜிபி வேரியண்ட்டை ரூ.29,990-க்கும், 256 ஜிபி மாடலை ரூ.32,990-க்கும் அறிமுகப்படுத்தியது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்