ஓப்போ ரெனோ 3-யின் 4ஜி வேரியண்ட் அறிமுகம்! 

ஒப்போ ரெனோ 3 4ஜி மாடல் தற்போது இலங்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஓப்போ ரெனோ 3-யின் 4ஜி வேரியண்ட் அறிமுகம்! 

ஒப்போ ரெனோ 3 4ஜி வேரியண்ட்டில் MediaTek Helio P90 SoC உள்ளது

ஹைலைட்ஸ்
  • ஓப்போ ரெனோ 3 4ஜி மாடல் இரண்டு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது
  • இந்த போனில் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் ஒற்றை வேரியண்ட் உள்ளது
  • ஓப்போ ரெனோ 3, டிசம்பரில் 5ஜி ஆப்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டது
விளம்பரம்

ஓப்போ ரெனோ 3 அதன் 5 ஜி மாடல் அறிமுகமான 4 மாதங்களில் 4ஜி வேரியண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய ரெனோ-சீரிஸ் போன் வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​டிஸ்பிளேவுடன் வருகிறது மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 


ஓப்போ ரெனோ 3 விலை:

Oppo Reno 3 4G வேரியண்ட் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், அடிப்படை 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் சிஎன்ஒய் 3,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.35,900)-ல் தொடங்கும், அதன் 5ஜி விலையை விட இது குறைவாக இருக்கும். இந்த போன் தற்போது Oppo இலங்கை தளத்தில் அரோரல் ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் கலர் ஆப்ஷன்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.


ஓப்போ ரெனோ 3 விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள்:

டூயல் சிம் (நானோ) ஓப்போ ரெனோ 3 4ஜி வேரியண்ட், ColorOS 7 உடன் Android 10-ல் இயக்குகிறது மற்றும் 6.4 இன்ச் ஃபுல் எச்டி + (1080x2400 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், போனில் MediaTek Helio P90 (MT6779V) SoC உள்ளது, அதோடு 8 ஜிபி ரேம் உள்ளது. இது முக்கியமாக ரெனோ 3 5ஜி ஆப்ஷனைப் போலல்லாமல் octa-core 7nm MediaTek Dimensity 1000L 5G SoC மற்றும் 12 ஜிபி ரேம் வரை உள்ளது. 

குவாட் ரியர் கேமரா அமைப்பில் எஃப்/1.8 லென்ஸுடன் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், டெலிஃபோட்டோ எஃப்/2.4 லென்ஸுடன் 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், வைட் ஆங்கிள் எஃப் / 2.2 லென்ஸுடன் 8 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் மற்றும் ஒரு எஃப் / 2.4 லென்ஸுடன் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் ஆகியவை அடங்கும்.

செல்பி எடுப்பதற்காக, ஓப்போ ரெனோ 3 4ஜி மாடலில் எஃப்/2.4 லென்ஸுடன் 44 மெகாபிக்சல் கேமரா சென்சார் முன்புறத்தில் உள்ளது.

ஓப்போ ரெனோ 3 4ஜி வேரியண்டில் 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB ஆகியவை அடங்கும். இந்த போன் 4,025 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. தவிர, இது 160.2x73.3x7.9 மிமீ அளவு மற்றும் 170 கிராம் எடையைக் கொண்டுள்ளது.


Is Redmi Note 9 Pro the new best phone under Rs. 15,000? We discussed how you can pick the best one, on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

  • KEY SPECS
  • NEWS
Display 6.40-inch
Processor MediaTek Helio P90 (MT6779)
Front Camera 44-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4025mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy S26: Camera Upgrades மற்றும் Snapdragon 8 Elite Gen 5 உடன் முழு விவரங்கள் லீக்
  2. வெறும் ₹1,299-க்கா ANC நெக்பேண்டா? Lava-வோட இந்த புதிய ஆடியோ ப்ராடக்ட் எப்படி இருக்குன்னு பாருங்க!
  3. மொபைல் கெய்மிங்க்கு இதான் Next Level! OnePlus 15 பத்தி தெரிஞ்சுக்கணுமா? மிஸ் பண்ணாதீங்க
  4. இந்திய கம்பெனில இருந்து மிரட்டலான போன்! Lava Agni 4 டீஸர் பத்தி முழு விவரம்!
  5. ரியல்மி-யின் புதிய ராக்கெட்! Realme GT 8 Pro நவம்பர்-ல் Flipkart-ல் தரையிறங்குகிறது!
  6. 7,500mAh சார்ஜரே இல்லாத பேட்டரியா? புதிய iQOO Neo 11 மாடல் சும்மா தெறிக்குது!
  7. 200MP Zeiss கேமராவுடன் Vivo X300 Pro அறிமுகம்! கேமரா பிரியர்களுக்கு ஒரு பொக்கிஷம்
  8. iQOO-வின் அடுத்த ராக்கெட்! iQOO 15, 10,000+ Multi-Core ஸ்கோருடன் Geekbench-ல் மிரட்டல்
  9. ஒன்ப்ளஸ், iQOO-வுக்கு போட்டியாக Realme! GT 8 Pro நவம்பர் 20-ல் இந்தியாவில் அறிமுகம்?
  10. Snapdragon 8 Elite Gen 5 சில்லுடனான முதல் போன்! OnePlus 15 Flagship-ன் ஸ்பெஷல் அம்சங்கள் இதோ
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »