ஓப்போ ரெனோ 3 ஏ ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 665 SoC, 48 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் 4,025mAh பேட்டரியுடன் வரவுள்ளது.
ஓப்போ ரெனோ 3 ப்ரோ மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
விரைவில் வரவிருக்கும் ஓப்போ ரெனோ 3 ஏ போனின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஓப்போ ரெனோ 3 ஏ என்று பெயரிடப்படும் இந்த சீரிஸில் நிறுவனம் மற்றொரு போனில் செயல்பட்டு வருவதாக இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியீட்டு தேதி தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை.
Oppo Reno 3A-வின் கூறப்படும் விவரக்குறிப்பை பிரைஸ்பாபா டிப்ஸ்டர் இஷான் அகர்வாலுடன் பகிர்ந்துள்ளார். இருப்பினும், போனின் வெளியீட்டு தேதி மற்றும் விலை குறித்து அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
அந்த அறிக்கையின்படி, Oppo ரெனோ 3 ஏ ஆண்ட்ராய்டு அடிப்படையிலான கலர்ஓஎஸ் 7.1-ல் இயங்குகிறது. போனில் முழு HD + தெளிவுத்திறனுடன் 6.44 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 செயலியுடன் 6 ஜிபி ரேம் கொண்டுள்ளது.
போனின் குவாட் ரியர் கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா ஆகியவை உள்ளது. மேலும், 2 இரண்டு மெகாபிக்சல் சென்சார்கள் உள்ளன. இவை சதுர தொகுதிகளில் இடம் பெற்றுள்ளன. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி சென்சார் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓப்போ ரெனோ 3 ஏ, 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதில் 4,025 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. ஃபாஸ்ட் சார்ஜ் செய்யும் ஆதரவு குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்த போன், 161x74x8.2 மிமீ மற்றும் 175 கிராம் எடையுள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது.
ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை ஓப்போ இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Cyberpunk 2077 Gets New Quests, Gameplay Features and Mod Support With Edgerunners 2 Update