சாம்சங் நிறுவனம் சார்பில் வெளியாகும் புதிய டேப்!
சாம்சங் நிறுவனம் சார்பில் வெளியாகும் புதிய டேப்!
சாம்சங் நிறுவனம் தனது டேப்லெட் தயாரிப்புகளை மேன்படுத்தும் வகையில் கேல்க்ஸி டேப் ஏ 8.0வை இன்று தாய்லாந்தில் அறிமுகம் செய்தது. இந்த கேலக்ஸி டேம் 8.0 இதற்கு முன்னர் சாம்சங் சார்பில் வெயான கேலக்ஸி டேப்யை விட உயரம் குறைந்து காணப்படுகிறது. மேலும் இந்த கேலக்ஸி டேப் 8.0, 8 இஞ்ச் திரை, ஆக்டா கோர் பிராசஸ்சர் மற்றும் 3ஜிபி ரேம் வசதியை கொண்டுள்ளது.
கேலக்ஸி டேப் 8.0 விலை மற்றும் வெளியாகும் தேதி:
தற்போது சாம்சங்கின் தாய்லாந்து தளத்தில் இந்த புதிய தயாரிப்பை குறித்து தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதன் அசல் விலை மற்றும் வெளியாகும் தேதி குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. மேலும் வெளியாகியுள்ள தகவல் படி கம்போடியா, லாஓஸ், மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் யுகேவில் இந்த தயாரிப்பு வெளியாகவுள்ளது. இந்தியாவில் வெளியாகும் தேதியை சாம்சங் விரைவில் வெளியிடும் என எதிர்பார்கப்படுகிறது.
கேலக்ஸி டேப் 8.0 அமைப்புகள்:
ஒரு சிம்-கார்டு மட்டுமே இந்த டேபில் பொருத்த முடிகின்ற நிலையில் 8 இஞ்ச் திரையை கொண்டுள்ளது. மேலும் இந்த டேபில் ஓரே தேர்வில் புளூ-லைட் ஃபில்டர் அமைப்பு பெற முடிகிறது. இதன் மூலம் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க முடிகிறது. இந்த டேபுடன் எஸ்-பென் தயாரிப்பும் வெளியாகிறது. தூசி மற்றும் தண்ணீர் புகா வசதிக்கு சான்றிதழான IP68 அங்கிகாரத்தை கேலக்ஸி டேப் 8.0 பெற்றுள்ளது.
ஆண்டுராய்டு 9 பையில் இயங்கும் இந்த கேலக்ஸி டேப் 8.0 Exynos 7904 பிராசஸ்சர், 3 ஜிபி ரேம், 5 மெகாபிக்சல் முன்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் பின்புற கேமராவும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கேலக்ஸி டேப் 8.0 இடம்பெற்றுள்ள கேமராக்களால் 4K வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.
32ஜிபி சேமிப்பு வசதியை கொண்ட இந்த கேலக்ஸி டேப் 8.0 4G LTE கனெக்டிவிட்டியை பெற்றுள்ளது. மேலும் புளூடூத் மற்றும் 4,200mAh பேட்டரி இடம்பெற்றுள்ள நிலையில் வேகமாக சார்ஜ் செய்யும் வசதி இடம்பெறுவதை பற்றிய தகவல் ஏதும் வெளியாகவில்லை. அதுபோல் இந்த கேலக்ஸி டேப் 8.0 கருப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் வெளியாகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Realme Neo 8 Key Specifications Leaked Online; Might Launch With an 8,000mAh Battery